காதலெனும் காலன்

அவள் உள்ளத்தில் எள்ளவும்
கள்ளம் இல்லா என்னுடன்
பழகிய நட்பை அவள் காலம்
கடந்துக் காத்து நிற்க
என் சுற்றத்தார் விட்ட
வார்த்தைகளால் சுயமிழந்து
காதலென நம்பி அதைச்
சொல்லும் முன் அவள்
மனமறிய மறுத்து உரைத்த
காதல் காலனாது நட்புக்கு....
எந்தன் தவறை மன்னிப்பு
எனும் ஒற்றைச் சொல்லில்
நான் அடக்க விருப்பம்
இல்லை எனக்கு நீ
தந்த தண்டனையாக இத்தனிமை
எண்ணி நானே ஏற்று
உனைவிட்டு விலகி நிற்பது சரியே....!