கல்லூரி
கல்லூரி
நான் இரண்டாவது முறை பிறக்கிறேன்...
முதல் முறையாக என்னை பெற்றது
என் பெற்றோர்...
இரண்டாம் முறையாக என்னை பெற்றது
என் கல்லுரி...
முதலில் என் பெயருக்கு முன்னால்
என் தந்தையின் பெயர்...
இரண்டாவது என் பெயருக்கு பின்னால்
என் பட்டத்தின் பெயர்...
முதல் முதலில் கண்களில் மட்டுமே
தெரிந்த சொர்க்கம்...
இரண்டாவது முறையாக அதே
சொர்க்கத்தில் வசிக்கிறேன்...
முதல் முறை தனியாக பத்து மாதம்...
இரண்டாவது நண்பருடன் பல மாதம்...
துன்பம் வரும் நேரங்களில்
சிரிக்க வைக்கும் நண்பனும்...
சிரித்து கடக்கும் நேரங்களில்
சிந்திக்க வைக்கும் ஆசிரியருடன்...
சிந்திக்கும் சில நேரங்களில்
மதி மயக்க வைக்கும் பூக்களுடன்...
கடந்தது கல்லூரி கனவுகள்
மீண்டும் பிறப்பேனோ என்று...
கானல் நீராய் மீண்டும்
கண்முன்னே தோன்றுகிறது...
- த.சுரேஷ்