பார்வைகள்

அவள் பார்வை
என் பார்வையுடன்
நொடிப்பொழுதில் சேர்ந்தது
கொடி மின்னல்கள்
இரண்டு உறவாட
சேர்ந்ததுபோல் -அப்போது
அவள் யார் என்று
அறிந்தேன் இல்லேன் நான்
என்னை யாரென்று அவளும்
தெரிந்தாள் இல்லை.
நொடிப்பொழுதில் எங்கள்
மனதை சேர்த்துவிட்டது பார்வை
ஜாதி மதம் அறியாத பார்வை
எங்கள் மனதில் சேர்த்தது
கரும்பில் பிழிந்தெடுத்த
கற்கண்டு சுவைத்தரும் காதல்
எனும் கனி ரசத்தை

காதலுக்கு தெரியாது ஜாதி
மொழி மதங்கள்-அது
துருவங்களை சேர்த்துவிடும்
அற்புத இணைப்பு
காமன் தந்த உறவு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Mar-18, 11:55 am)
Tanglish : paarvaikal
பார்வை : 147

சிறந்த கவிதைகள்

மேலே