காதல் கணவனுக்கு

குட்டி ஊரிலே,
சுட்டி பெண்ணாய்,
பட்டத்தையும் பட்டாம்பூச்சியையும்,
எட்டி பிடித்து,
துள்ளி குதித்தேன்;

பருவம் அடைந்தாலும்,
அன்பு தந்தைக்கு,
வானத்து தேவதையாய்,
செல்ல குழந்தையாய்,
மகாராணியாய் வாழ்ந்திருந்தேன்;

இன்றோ!
முகமறியா ஊரிலே,
மாலையிட்ட மன்னவனே!

கரம் பிடித்த நாள் முதல்,
கண் மூடும் நாள் வரை,
காதலரியா கன்னிகைக்கு,

உயிரும் நீயே!
உலகமும் நீயே!
காதலும் நீயே!
கள்வனும் நீயே!

தவறேதும் செய்தால்,
வெறுக்காது பொறுப்பாயே!

எழுதியவர் : மா செந்தில் லோகு (29-Mar-18, 3:43 pm)
பார்வை : 1851

மேலே