காதலின் சுவை

காதலின் சுவை



நாவை போல எனது இதயம்
காதலின் வலியை சுவைக்கிறது...

காதலை மனதுக்குள் ஒளித்து வைத்து
காத்த போது கார்ப்பாகவும்...

காதலை உன்னிடம் சொல்லமுடியாமல்
துடித்த போது துவற்பாகவும்...

உன்னை கண்டு தினம் தினம் திரும்பி
வரும் போது புளிப்பாகவும்...

காதலை உன்னிடம் சொன்ன
நிமிடத்தின் போது இனிப்பாகவும்...

உன்னிடம் இருந்து வந்த பதிலை
கேட்ட போது கசப்பாகவும்...

காதலை நினைத்து இதயமும்
கண்ணீர் துளிகளில் உவற்பாகவும்...

என் இதயம் உணர்கிறது...

- சுரேஷ்

எழுதியவர் : சுரேஷ் (30-Mar-18, 5:31 pm)
Tanglish : kathalin suvai
பார்வை : 423

மேலே