குழம்பி திரிகிறேன்

கார்மேகக் கூட்டம் மோதிக்
கொள்ள மழை நீரும்
விண்ணில் இருந்து மண்
தொட தயங்கி நில்லா
இடியும் இடை மின்னலை
இடை மாறித்து நிறக்க
என்னவென்று நான் அமர்ந்த
இருக்கையில் இருந்தபடி
மேல் நோக்கிய பார்க்க
பின்பு வழிவந்த
வீதியை நோக்க வானத்து
வெண் நிலவும்
வானிறங்கி வீதியில் நடவக்
கண்டேன் வான்
நிறைந்த குழப்பக் காரணம்
இதுவென அறிந்தேன்
நானும் ஒருகணம் அவள்
அழகில் குழம்பலானேன்
போதை மகனாய் இவன்