போதாதடி
கருமை நிற நீர்வீழ்ச்சியாய் உன் கூந்தல்
அதில் நீ சூடிக் கொள்ளும் மல்லிகை
இவ்வழகைக் காண கண்கள் இரண்டு போதாதடி!!
உன் வரவை அறிவிக்கும் உன் கொலுசின் மணிகள்
அவ்வோசையும் ஒரு இசை அல்லவோ!
அதை கேட்க என் செவி இரண்டும் போதாதடி!!
நீ அணிந்ததால் மகிழ்ந்து கூத்தாடும்
காதணிகளும் மோட்சம் பெற்றன
உன் கண்ணம் உரசிய புண்ணியத்தால்!!
கதிரவனுக்கும் கண் கூசுமடி
உன் மூக்குத்தியின் ஒளி பட்டால்!!
உன் கைகளில் தாளமிடும் வளவியாய்
மாறிட வரம் கொடுப்பாயோ எனக்கு?!
விழி இரண்டில் மை வைத்து அழகாய்
பேருந்தை எதிர்நோக்கி காத்திருக்கும் உன்னை
விழிநேரில் பார்க்க இயலாமல்
நான் தவிக்கும் தவிப்பை சொல்ல
இவ்வுலக மொழிகள் போதாதடி!!