எந்தன் நெஞ்சிக்குள்ள

எந்தன் நெஞ்சிக்குள்ள
பட்டாம்பூச்சி படபடனு
என்னென்னமோ செய்ய!
வானம் மேல நில்லும்
சூரியனும் எனக்குமட்டும்
சில்லென்று வீச!!
அழகாளே...
துளியும் அலையாச்சே!
மலைக்கூட...
மழைபெய்யும் மேகமாக ஆச்சி!
சிலையாக...
மாறியதே எந்நெஞ்சம் தானே!!
உனைவிட்டு விலகிப் போனேன்
மெல்ல மெல்ல தள்ளி தள்ளி
ஆனாலும் பின்னே வருவேன் நான்...
புதுசட்டை மாட்டிக்கிட்டு
உன்னப்பார்க்க தூரம்நின்னேன்
பொதுவாக இதுதான் காதலா?

ஒரே பார்வையாளே-என்னை
சாய்த்து போட்டாயே ஏனடி?
காலில் தைக்கும் முள்ளை-எந்தன்
நெஞ்சில் தைத்தாயே ஏனடி?
கரைப்போன...
துணியப்போல நான் புதுமையானேன்!
உனைக்கண்டு...
வானில்போகும் பறவையாக ஆனேன்!
ஊரெங்கும்...
திரிஞ்சவன் கூண்டு கிளியானேன்!
என்ன செய்ய???
வாழ்க்கையே ஏதோ மாறியதே!!

ஊரசுத்தி பார்ப்போமுன்னு-நீயும்
சொல்ல வேண்டும் என்று
இறைவனிடம் கேட்டுநின்றேன் நான்...
தனிமையில் நிற்கும்போது-உன்னை
நானும் நினைக்கையிலே
அதுபோலொரு சுகமில்லையே!!
தினம்போகும் சாலை அதில் நீ
தன்னாலே மாறுகிறேன் நான்!
பனிக்கட்டி போல உன்னால
கரைந்தேதான் ஓடுகிறேன்!
கரைந்தாச்சி...
அதனால் நீராவியாச்சி!
மலைக்கூட...
பொழிவது சந்தேகமாச்சி!
ஆனாலும்...
என்னுயிரும் உன்னைச்சுற்றுதே!
சரியாச்சி...
இதுதானே மெய்காதல் ஆச்சே!!!

எழுதியவர் : sahulhameed (31-Mar-18, 4:12 pm)
பார்வை : 577

மேலே