கவி எனும் சிற்பி நான்

கற்சிலை உயிர்பெற்று
நிற்கும், நடமாடும்
நடனமுமாடும் ,சிற்பியின்
கற்பனையும் உள்ளமும்
அவன் உளியில் இயங்கும்போது
சிலை வடிக்கும் போது
பெண்ணே இந்த கவிஞன் நான்
உன்னை என் கற்பனையால்
எந்தன் எழுதுகோல்கொண்டு
காகிதமாம் கல்லில் செதுக்கி
கவிதைச்சிலையாய் தீட்டிட
ஆசைவைத்தேன் வந்திடுவாய் நீ
எந்தன் கற்பனைக்குள்
ஒவ்வோர் அங்கத்தின் அழகாய்
எந்தன் கவிதை சிலைக்கு
உயிர்தந்து ஆட, ஓட நடனமாட
அந்த ஆயிரங்கால் மண்டபத்து
உயிர் சிற்பங்கள் போல
இந்த கவிதை சிற்பியின்
எழுதுகோல் செதுக்கலில்
முழுமை பெற்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Mar-18, 4:05 pm)
பார்வை : 141

மேலே