அவள் அழகு

என்னவள் அழகு *
------------------------------

அவள் என்னவள் எனக்கு
ஒரு பெண்ணாய்த்தான் தோன்றினாள்
ஒரு பெண்ணை பெண்ணில் அழகுடன்
அவள் முகம் திங்களல்ல
விழிகளும் மான் விழியோ
மீன் விழியோ அல்ல
அவை பெண்ணின் விழிகள்
அவள் வாய் செவ்வாய் எனினும்
அது பவளவாய் அல்ல
அவள் பற்களும் சீரான
அழகு வெண்பற்கள் , ஆயின்
அவை பாண்டியநாட்டு முத்துக்கள் அல்ல
அவள் இடையும் சிற்றிடையே
சீந்தில் கொடி அல்ல
என்னவள் நடையில் ஆடலழகி
அது அவள் நடையே
அன்னத்தின் நடை அல்ல
அவள் பேச்சில் இசை கேட்கிறது
அது அவள் குரலே குயிலின் குரல் அல்ல

என்னவள் பேரழகி, பிரமன்
படைத்த அழகின் தனிமை,
இதுதான் பெண்ணின் அழகு
என்றான் படைத்த நான்முகனும்
இதுவே இயற்கையில் பெண்ணின்
அழகு என்று அவனும் சொன்னான்

( ஷேஸ்பியர் உடைய காதல்
சொன்னெட் படித்தபோது
வளர்ந்தது இக்கவிதை )

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Mar-18, 3:45 pm)
Tanglish : aval alagu
பார்வை : 364

மேலே