கண்ணாடிக்குள் அடைப்பட்டக் காட்சி
உழுது விதைத்தவன்
உழைப்பின் பலனாய்
விளைந்தவை எல்லாம்
இரட்டிப்பாய் வீடு
திருப்பிட ஆயர்
தம் ஆநிரைகளின்
வயிறு நிறைக்க
விளைநில விளைச்சலின்
மிச்சங்களில் விட்டு
மேய்த்து மகிழ்ந்த
கண் கண்ட காட்சி
எல்லாம் இப்படி
கண்ணாடியில் அடைப்பட்ட
காட்சி ஆகிவிட்டது...........!