தெற்கு தேய்கிறதா தேய்க்கப்பட்டதாக காட்டப்படுகிறதா

தென் மாநிலங்கள் வருமானம் கொண்டு தான் வட மாநிலங்கள் பிழைக்கிறார்கள். திராவிட நாடு தமிழ் நாடு என்று பிரிவினை சத்தம் அதிகம் கேட்கிறதே? உண்மையில் நிலை என்ன? வடமாநிலங்களால் வரி வருமானம் இல்லையா? {கேள்வி : தியாகராஜன், நளினி இன்னும் சிலர்...}

முதலில் அவர்கள் உழைக்கவில்லை உக்காந்து சாப்பிடுகிறார்கள் போன்ற மிமீஸ் எல்லாம் நம்புவதை நிறுத்துங்கள்.. ஏன் என்றால்.. இதோ சில முக்கியமான விவரம்.

மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (ministry of micro small and medium enterprises௦ கொடுக்கும் புள்ளிவிவரம் கூறும் உண்மை ஒன்றை அனைத்துத் தமிழக மக்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும். மிக முக்கியமாக மாணவர்கள், படித்த இளைஞர்கள்.

இந்தியாவில் MSME மூலம் கடன் பெற்று சுயதொழில் செய்வோர் உற்பத்தி தொழிற்சாலைகள் (manufacturing sector) என்று எடுத்துப் பார்த்தால் தமிழகத்தில் கிராமப்புறங்களில் 6.83% , நகர்ப் புறங்களில் 15.82% ஆகும்.

அதாவது சுய தொழில் செய்ய விரும்பி கடன் பெரும் நபர்களில் சராசரியாக 11% பேர் தான் ஆடை , automobile gears, Bags , Tennis Ball என்று பல பொருட்கள் சிறுதொழில் உற்பத்தியாளர்களால் தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் நீங்கள் கூறும் UP, புகார் இன்னும் சொல்வதானால் ஜம்மு காஷ்மீர் கூட இந்த விசயத்தில் 25% மேல் இந்த உற்பத்தி சார்ந்த சிறுதொழில் ஈடுபடுவோர் சதவீதம் அதிகம் என்கிறது இந்தப் புள்ளி விவரம். இதை எளிமையாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் - பொதுவாக இந்த மாநிலங்களில் சிறுதொழில் நடுத்தர தொழில் செய்வோர் சதவீதம் அதிகம்.

இது முதலில் புரிகிறதா????? 2000 VAO வேலைக்கு 20,8000பேர் விண்ணப்பம் போடும் கூத்து எல்லாம் இங்கே தான் அதிகம். அங்கே தொழில் சார்ந்த தேடல் உண்டு. பின் எப்படி தமிழகம் அதிக வரி வருமானம் ஈட்டித் தருகிறது???? தென் மாநிலங்கள் அதிகம் வருமானம் ஈட்டித் தருகின்றன என்று தகவல்கள் மத்திய அரசு வெளியிடுகிறது????
----------------------------------------------------------
இதைப் புரிந்து கொள்ள உங்கள் அனைவருக்கும் இந்தியாவின் வர்த்தக வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியம். அதாவது கிழக்கிந்திய கம்பெனி , VOC, போர்த்துகல் என்று அனைத்து 17ஆம் நூற்றாண்டு ஆரம்பக் காலம் முதல் அடுத்த 250வருடங்கள் தொழில் வளர்ச்சி வேகம் பிடித்த நேரம் இந்தியாவில் இரண்டு 3இடங்களில் தான் அதிகமாக முதலீடும் , வர்த்தகமும் , தொழில் கூட்டமைப்பும் பெருகின.

1.கல்கொத்தா 2.மெட்ராஸ் பிரிடன்ஷி 3.அகமதாபாத்

இந்த மூன்றில் இருந்து தான் அதிகப்படியான வர்த்தகம் ஆங்கிலேயர்கள் செய்தார்கள். முக்கியமாகக் கிழக்கிந்திய கம்பெனிக்கு வருமானமே இந்தச் சென்னை மாகாணமும் , கல்கொத்தாவும் தான். இதை 1668-70 களில் வெறும் 4.3மில்லியன் 1975-76 களில் 69.3மில்லியன் என்று உயரக் காரணம் நமது இந்தியர்களின் உற்பத்தித் திறன்.

இதனால் அதிகம் அடிப்படை கட்டுமானம் தொட்டு வர்த்தக அமைப்புகளும் துறைமுகங்களும் பெருமளவு முன்னேற்றம் கண்ட இடங்கள் சென்னையும் கல்கத்தாவும் தான். அதனை அடுத்து பம்பாய் கோவா... இதை ஏன் கூறுகிறேன் என்றால்.

இங்கே பலர் எதோ திமுக அதிமுக வந்து தான் நாட்டை முன்னேற்றியது போல கதை பேசுகிறார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று புள்ளி விவரங்கள் சொல்லி தமிழகம் தான் சிறந்தது. தென் இந்திய மக்கள் தான் உழைக்கிறார்கள் என்று ஒரு கற்பனை சித்திரத்தைத் தீட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு முன்பு சென்று புள்ளி விவரம் வாங்கினால் தான் தெரியும் இது இயற்கையாகவே கடந்த 300வருடங்களாக மெல்ல வளர்ந்து நிற்கும் இடம் என்று.

உண்மை என்னவென்றால் 90மதிப்பெண் வாங்கக் கூடிய ஒருவனை 75மதிப்பெண் எடுக்க வைத்து அதை 60மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் நாங்கள் தான் நல்ல படிக்க வைத்தோம் என்று கூறுவது போன்றது இந்தப் பேச்சு.

--------------------------------------------------------------
சரி என்ன கூறுகிறீர்????

இயற்கையாக சென்னையும் கல்த்தாவும் பம்பாய் இவை கொண்ட துறைமுக வசதி காரணமான அதிகம் வர்த்தகம் வரிவருமானம் கிடைக்கும் என்பது பல காலம் நடக்கும் உண்மை. இது புதிய செய்தி அல்ல. இதனால் Central Excise and Custom Duty போன்றவை எப்போதுமே இந்த மாநிலங்களுக்கு அதிகம் என்பதை மறக்கவேண்டாம்.

அதற்காக அது எல்லாமே தமிழர்கள் உழைப்பு என்று கூறமுடியாது. பல மாநிலத்தவர் தொழில் தொடக்கி செய்து கிடைக்கும் வருமானம் தான். இந்தியர்கள் உழைப்பு என்று நாம் கூறுவது தான் சரியாக இருக்கும். ஏன் என்றால் இங்கே இருக்கும் பல நிறுவனகள் உண்மை பின்புலம் அப்படி. சரி முதல் 100வரி வருமானம் அதிகம் கட்டும் கார்பரேட் நிறுவனங்களில் எத்தனைத் தமிழர்களுடையது????sun Tv தமிழர்களுடையது. ஆனால் அதன் சேனல்கள் பல பல மொழிகளில் வெளியாகிறது. எனவே தொழில் தமிழர் என்றாலும் அதன் ஆதார ஆதரவு அனைத்து மக்களுடையது. அது போல தான் அனைத்து கார்பரேட் நிறுவனமும். (4,5 நிறுவனம் தான் தமிழர்களுடையது).

இதை ஏன் கூறுகிறேன் என்றால் பஞ்சாப் , ஹரியானா , ஜம்மு , டெல்லி , ராஜஸ்தான் , உத்தரபிரதேசம் என்று பல மாநிலங்களுக்குச் சரக்கை ஏற்றுமதி செய்ய துறைமுகம் கிடையாது. என்பது தான் அவர்கள் பெரும் பிரச்சனை. அது தான் நமக்குச் சாதகமான விஷயம்.

அதற்காகவே அவர்கள் உழைக்கவில்லை , இங்கே வரும் வருமானம் எல்லாம் எங்கள் உழைப்பு என்று சொந்தம் கொண்டாடுவது சுத்த முட்டாள்தனமான - இந்த புதிய தலைமுறை டீவி செந்திலுக்கும் , கார்த்திகேயனுக்கும் வேண்டுமானால் சரியாக பாடலாமே , பிரிவினை விதைக்க வேண்டுமானால் உதவுமே ஒழிய உண்மை அல்ல.
-----------------------------------------------------------

அது சரி மொத்த வருமானத்தில் 22% வருமானம் கொடுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் எதிர்ப்பு என்று திரிந்தவன் எல்லாம் எப்படி இந்த வருமானத்தை மட்டும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்????? என்னடா நியாயம் சாமி.... நேற்று வரை காப்பரெட் எதிர்ப்பு பேசிய வாய் இன்று அவன் கொடுக்கும் வருமானத்தை தன சொந்த வருமானம் போல எப்படி பெருமை பேச முடிகிறது இந்த மீமிஸ் புரட்சி காரர்களுக்கு?????

இன்னொரு கூட்டம் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று பேசி திரிந்தது... ஆனால் உண்மையில் தெற்கு மற்ற மாநிலங்களை விட நல்ல நிலையில் உள்ளது என்று பல காலமாகப் பல பொருளாதார வல்லுநர்கள் கூறியும் கேட்காத கூட்டம் - இன்று மட்டும் எப்படி அதிகம் வருமானம் தருகிறோம் என்று பேச முடிகிறது?? நல்ல இருக்குனு இப்போவாது ஒத்துகொள்வானா??? இது என்ன லாஜிக்????? வெக்கமே இல்லையா இந்தத் திராவிட தறுதலைகளைக்கு.. வருமானமும் அதிகம் கிடைக்கிறது சொல்றானுக - வளர்ச்சி இல்லை என்றும் சொல்றானுக..

ஆக எப்படியது பிரிவினை பேசவேண்டும் - அரசுக்கும் மக்களுக்கும் இடையே எதையாது தூண்டிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.. அப்போது தான் பிரிவினைவாதிகளுக்கு வசதி ??????
-----------------------------------------------------------

நிதி பகிர்மானம் எப்படி கணக்கிடபடுகிறது???

நிதி பகிர்மானம் பொறுத்தவரை நாம் நினைப்பது போல கிடையாது... 100ரூபாய் வருமானம் நம் மூலம் அரசுக்குக் கிடைக்க அதில் 42ரூபாய் நமக்கு மீண்டும் கிடைக்கிறது. (முன்பு இது 32ரூபாயாக இருந்தது). மீதம் உள்ளவை கொண்டு ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை , காடுகள் அமைப்பு என்று பல நூறு விசயங்களைக் கணக்கிட்டு தான் நிதி பகிர்மானம் செய்வது நடக்கிறது. இது ஒரு சிக்கலான கணக்கு. வடகிழக்கும் மாநிலங்கள் சிறப்பு Special status என்பது அந்த மானியத்தின் கட்டுமானம் , வாழும் சூழலில் உள்ள சிக்கல் , மக்கள் தொகை , இயற்கை மற்றும் எல்லை என்று பல விசயங்களை கொண்டு விவாதம் செய்து நாம் சிக்கிம் , மேகலாயா , திரிபுரா போன்ற மாநினன்களை Special status கொடுத்து அதிகம் நிதி உதவி செய்கிறோம். அது தவறே அல்ல. {இப்போது இந்த Special status விஷயம் பயனற்றது என்று முடிவுகட்டிவிட்டனர். எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.) இது ஒரு சிக்கலான பார்முலா.

சரி அப்படி ஒப்பிடுபவர்கள் இப்படி ஒப்பிடலாமே :

National Highway என்று பார்த்தால் தமிழகம் - 4462km , ஆந்திரம்&தெலுங்கானா - 4472km , கர்நாடகா - 3704km , மகராஸ்ரா -4176km.... என்று இருக்கக் கொஞ்சம் ஜம்மு , ஹிமாச்சல் , ஹரியானா என்று தேடி ஒப்பிடவேண்டியது தானே?????அட கொஞ்சம் வடகிழக்கு மாநிலங்கள் நிலையை எடுத்துப் பாருங்கள்... உண்மையில் யார் பலன் நன்கு அடைந்து வளைந்து வருகிறார் , யார் வளர்ச்சி இல்லாமல் பின் தங்கி நிற்கிறார் என்று உண்மை புரியும்.

சரி ரயில்வே நிலையங்கள், துறைமுகங்கள் , விமானநிலையங்கள், தபால் நிலையங்கள், வங்கி வசதிகள் என்று எடுத்துக் கூட ஒப்பிடுங்கள்... தாராளமாக. இந்தியாவில் உண்மையில் பின்தங்கி இருப்பது வடகிழக்கு மாநிலங்களான மிசோரம் , சிக்கிம் , திரிபுரா , நாகாலாந்து , மேகாலயா போன்றவை தான்.

ஒரு உண்மை சொல்றேன் கேளுங்க தமிழகம் என்றுமே எந்தக் காலத்திலும் பின்தங்கி இருந்ததே இல்லை. இயற்கையாக நமது மாநிலம் அபப்டி தன்மை கொண்டது.

ஆம் கடந்த 50வருடத்தில் மெல்ல மெல்ல நாம் சுயதொழில் செய்யும் ஆர்வம் இழந்து நிற்கிறோம். அந்த வகையில் தான் நாம் பின்தங்கி விட்டோம். இதை தான் நாம் சரிசெய்ய முயற்சிக்கவேண்டும்.
------------------------------------------------------------

இறுதியாக :

மிக எளிமையாகக் கூறினால் "நாட்டின் வரிவருமானம் என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் கிடைக்கும் வருமானத்தில் 22% காப்பரெட் நிறுவனங்கள் வரி, union Excise duty வருமானம் 10%, customs 10% இவை எல்லாம் நீங்கள் நினைப்பது போல அந்த அந்தப் பகுதி மக்கள் உழைப்பால் மட்டும் வருவது அல்ல". மொத்த நாட்டையும் நேசிக்கக் கூடாது இந்தியாவின் மீது பிரிவினை வெறுப்பை விதைக்க ஒரு கூட்டம் இதைத் தந்திரமாக திரிக்கிறது.

{Kia Motors ஏறக்குறைய 7,050 கோடி ரூபாய் முதலீட்டில் 10,000பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வந்த நிறுவனம் சென்னையை விட்டு ஆந்திரா ஓட காரணமே இந்த தொடர் போராட்டம் தூண்டும் போராளிகள் தான். ஆனால் இன்று வெக்கமே இல்லாமல் நிறுவனங்கள் மூலம் வரும் வரி வருமானத்தை சொந்தம் கொண்டாடுராணுக இந்த கேடுகெட்ட போராளிகள்...}

சுயதொழில் செய்ய உங்களைச் சுற்றி உள்ள அனைத்தும் வாய்ப்புகள் தான் என்று மோடி கூறினால் "என்னைய பக்கோடா போடா சொல்கிறார் மோடி" என்று கேவலமாக பேசி மிமீஸ் போடும் முட்டாள்கள் கூட்டத்தால் அழிவுதான் வருமே தவிர அறிவு வராது. அறிவுகெட்ட மிமீஸ் கூட்டத்தை முதலில் நம்புவதை நிறுத்தவும்.

அதைவிட முக்கியம் இந்த புதிய தலைமுறை போன்ற செய்தி நிறுவனங்களை. இவனுக்க வேலை அவர்களுடைய பெரும் முதலாளி என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்ப திரித்து நியாயம் பேசுவது தான். பாவம் புதிய தலைமுறை - கல்வி தந்தை அவர்கள் ஜெயிலுக்கு போய் வந்தது முதல் இந்த சேனல் காரணம் இந்தியாவை மறைமுகமாக விமர்சித்துப் பிரிவினை பரப்புகிறான். அதற்கு ஜால்ரா தான் காத்திகேயன் , செந்தில் எல்லாம். (ரஜினி எதிர்ப்பில் உச்சபட்ச வேகத்தில் இருப்பதும் இதனால் தான்.)

ஆகா டீவி விவாதங்களை விட்டு விட்டு செய்திகளை, மீமிஸ் நம்புவதை விட்டுவிட்டு.. கொஞ்சம் உண்மையைத் தேடு உணருங்கள். மிக முக்கியம் சுயதொழில் செய்யும் ஆர்வம் கொள்ளுங்கள். எனவே இவனுகள விடுங்க msme மூலம் ஏதாது உற்பத்தி சார்ந்த தொழில் செய்து பொருளாதாரம் தேட சிந்திக்கவும். அதுவே இன்றைய தமிழகத்தின் தேவை. மோடி ஒழிக கத்திட்டு போகட்டும்.. ஆனால் எனக்கு தெரிந்து இவருடைய ஆட்சியில் தான் நன்கு எளிதில் உற்பத்தி சார்ந்த துறைக்கு எளிதில் கடன் கிடைக்கிறது. எனவே நல்ல விசயங்களை தேடுங்கள்.

"சுயதொழில் சார்ந்த சிந்தனையை வளர்ப்பது அவசியமா ; இல்லை தெரியாத விஷயத்தை பேசி எவனையாது குறை சொல்லிட்டே திரிவது அவசியமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்".

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

-மாரிதாஸ்

எழுதியவர் : மாரிதாஸ் (1-Apr-18, 9:34 am)
பார்வை : 205

மேலே