என்னுள் உள்ள உன்னுள் ஒரு வினா

சொல்வதற்கில்லை
என் அச்சங்கள்.
திசைகளில் நான்
குழம்புகின்றேன்.
காற்றலைவில்
பதறிடும் மனதில்
சில்லிடும் துயரம்.
உறவுகள் குலைந்து
தீவென்று தனித்தது.
ஒன்றுமற்றவனிடம்
பாயும் ஈட்டிகளில்
நிணமல்ல உயிர்
தொங்கி இருக்கிறது.
என்ன கேட்டேன்...
பசிக்கு உணவு
உணவுக்கு வேலை
வேலைக்கு கல்வி.
போதும் எனக்கு.
புல்நுனியில் மேயும்
என் கனவுகள்
என்னோடு போகும்...
வாக்களித்த நன்மைக்கு
சீக்களித்த கொடுமை.
நீயும் என்போல்தான்
என்பது தெரியும்.
ஒரே கேள்விதான்....
நாமெல்லாம் ஏண்டா
இப்படி ஆயிட்டோம்?

எழுதியவர் : ஸ்பரிசன் (1-Apr-18, 7:17 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 150

மேலே