அம்மா

அகம் குளிர்ந்தேன்..
மனம் குளிர்ந்தேன்
அன்ணையால்..

பாசத்தின் வேலியால்
பக்குவபடுத்தியவள்..

தன்வயிறு பட்டினிகிடக்க
என்வயிறு நிரப்பியவள்...

கொஞ்சம் கோவம்
கொஞ்சும் பாசம்..

நான் தூங்கும் நேரத்தில்
நீ தூங்கா நேரம்..

என்றைக்கும் என்னை
தாங்கும் தோழி..

இன்றைக்கும் நான்
தாங்கும் வேலி...

பருவநிலை மாறினாலும்
உந்தன் பாசநிலை மாறாது..

மகத்துவ தாயே எந்தன்
மருத்துவம் நீயே...

என்றும் நீதான் என்
அன்ணையே..

ம.முகையதீன் மகபூப்

எழுதியவர் : ம.முகையதீன் மகபூப் (1-Apr-18, 7:59 pm)
Tanglish : amma
பார்வை : 1468

மேலே