என்ன தான் மாயம் செய்தாயோ
என்ன தான் மாயம் செய்தாயோ
என் இரு விழிகளில்
உனைக்காண தவிக்கிறேன்
என்ன தான் செய்தாயோ என் மனதை
உனைக்காணமல் என் மனம் வருந்துகின்றது
என்ன தான் செய்தாயோ
என் இதயத்தை
உனைக் காணாமல் துடிக்க மறுக்கின்றது
என்ன தான் செய்தாயோ என் எண்ணங்களை
உன்னைச்சுற்றியே வட்டமிடுகிறது
வேறு சிந்தனை இல்லை
நீயே என் சிந்தனை ஆனாய்
உன் குரல் எங்கும் கேட்கிறது
நீ இல்லாதும் என் அருகில் இருப்பது போல் உணர்வு மேலோங்க
என்ன தான் மாயம் செய்தாயோ
கள்வனே தெரியவில்லை
புலம்பி பிதற்றுகின்றேன்
அய்யகோ என்ன தான் மாயம் செய்தாயோ !