அழகைத்தான் பாடத்தான்
உன்னைத்தான் காணத்தான்
மண்ணில்தான் பிறந்தேனா?
என்னைத்தான் நெஞ்சைத்தான்
உன்னிடம்தான் இழந்தேனா?
கண்ணைத்தான் மூக்கைத்தான்
இதழைத்தான் காண்பேனா!
நெற்றித்தான் குழல்கற்றைத்தான்
கண்டதும்தான் வீழ்வேனா!
உடலைத்தான் தறிக்கத்தான்
ஆடையைத்தான் நெய்தானா!
அழகைத்தான் பாடத்தான்
என்னைத்தான் படைத்தானா!
இதயத்தைத்தான் காதலைத்தான்
துடிக்கத்தான் செய்தானா
இரவைத்தான் பகலைத்தான்
மறந்தும்தான் இருப்பேனா!
ஆசையைத்தான்
காதலைத்தான்
உன்னிடம்தான் உரைப்பேனா!
ஊரைத்தான் கூட்டித்தான்
கரத்தைத்தான் பிடிப்பேனா!