காலம்

பிரபஞ்சம் பிறந்த
பெருவெடிப்பில் சேர்ந்து
பிறந்ததோ காலமும் ,

பெருவெளியில் முடிவில்லா
பிரபஞ்சம் போல் ,
உயிர்களையெல்லாம்
காலமாக்கிப்போன இந்த
காலம் காலமாகப்போவதில்லை.

ஆதியும் அந்தமும் இல்லா
காலத்தை ,
கருவி செய்து பகுத்து பார்த்தோம்
சிரு நொடிமுதல் , பெரு மணி வரை
கடிகாரத்தில் .

சூரியனை வைத்து சொன்னோம்
பகல் இரவென்றும் ,
அந்தி சாமமென்றும் .

விடிந்த பொழுதில்
முடிந்த நாள் கணக்கிட்டோம்
நாள்கட்டியில் ....
வாரமென்று , மாதமென்று, வருடமென்று.

கடந்தகாலம் இறந்துபோனதென்றோம் ,
நிகழ்காலம் நிஜம் என்றோம் ..,
நிஜம்கூட ஒருகணமும் நின்றதில்லை .
எதிர்காலம் நமக்கான கனவு போல ,
கனவு கண்டிப்பாய் வருமென்ற
உறுதி இல்லை .

காலத்தை
பிரித்து , பகுத்து , அளந்து பார்த்த
நாம் நிருத்திப்பார்த்ததில்லை.
ஒருபோது அது நம்மை
நின்று பார்த்ததும் இல்லை .

விஞ்ஞான வேகமெல்லம்
வீழ்த்திப்பார்க்க அல்ல ,
காலத்தின் வேகத்திற்கு
சற்றே இணைகோடுக்க.

காலசக்கரத்தின் சூழச்சியில்
இடையில் ஏறி , இடையில் இறங்கும்
உயிர்கள் நாம் .
வாழ்க்கை என்ற சிரு ஆரத்தில்.

எழுதியவர் : (2-Apr-18, 11:48 am)
சேர்த்தது : சகி
Tanglish : kaalam
பார்வை : 45

மேலே