இறைவனின் ஆதங்கம்

உலகமெனும் சுவற்றினிலே
சித்திரமாய் உனை வரைந்தேன் !
உறவுயெனும் துணையையும்
உன்னருகில் நான் வரைந்தேன் !
பாசமெனும் பற்றதனை
பக்குவமாய் உனில் பதித்தேன் !
பசியென்ற விருந்தாளி
பலியாக வந்திடாமல் ,
பழங்களையும் நான் படைத்தேன் !

பகுத்தறிவை பெற்றிட்ட உமக்கு
பட்டாடை படைத்திட்டேன் !
வையகத்தை சுற்றிவர
வாகனங்கள் நான் வடித்தேன் !
வறுமைதனை விரட்டியடிக்க
வகைவகையாய் வழியமைத்தேன் !

வணக்கங்கள் செலுத்திடவும்
வரம்பில்லா முறைகொடுத்து ...

உயிர்ப்பித்து எழுப்பியதும்
என்னையே நீ மறந்துவிட்டாய் !!!

எழுதியவர் : டீ எ முஹம்மது ஜமாலுதீன் (2-Apr-18, 12:18 pm)
சேர்த்தது : jamal7865
பார்வை : 44

மேலே