கோலத்தில் இதயத்தின் ஓலம்

சிறு சிறு புள்ளிகள்தான் வைத்தாய்
இங்கொன்றும் அன்கொன்றுமாக
உன் வாசலோடு சேர்த்து
என் இதயமெங்கும் .

இரு விரல்கொண்டு
வெண் மாவினிலே
பா வடித்தாய்,
வெண்கோடுகளாய்
வளையவந்து
சிறைபிடித்தாய்
புள்ளிகளை.

சிறைப்பட்ட சிறு சிறு
புள்ளிகளோடு,
கோலத்தில் சிக்கிவிட்ட
என் இதயம் எங்கே ?

எழுதியவர் : (2-Apr-18, 2:31 pm)
சேர்த்தது : சகி
Tanglish : kolam
பார்வை : 68

மேலே