கொண்ட செயல் முடியும் வரை

இமையம் இடிந்தாலும்
......இதயம்து இடிந்துவிடாமல்
காயம் பல பட்டாலும்
......கவலையது கொள்ளாமல்
சோதனை பல வந்தாலும்
......வேதனையது கொள்ளாமல்
பாதகம் பல நேர்ந்தாலும்
.......பதட்டமது அடையாமல்
நேரம் கெட்டாலும்
.......நேர்மையது கெடாமல்
கொண்ட செயலில்
.......கொடுமை பல நேர்ந்தாலும்
கொண்ட செயல் முடிக்கும்
.......எண்ணமது வேண்டும்.


-கலைப்பிரியை

எழுதியவர் : கலைப்பிரியை (2-Apr-18, 4:06 pm)
சேர்த்தது : kalaipiriyai
பார்வை : 476

மேலே