படித்தால் மட்டும் போதுமா

படித்தால் மட்டும் போதுமா
பாதியில் விட்டால் நட்டமா
அடிபட அடிபட கற்களும்
அழகிய வடிவம் பெற்றிடும்
துடிப்பாய் உழைத்து வாழ்ந்திட
துன்பம் நம்மை நாடுமா
மடிவோம் நாமும் நிச்சயம்
மாண்புடன் வாழ்வோம் இலட்சியம்

சுரேஷ் ஸ்ரீனிவாசன்

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (2-Apr-18, 11:45 am)
பார்வை : 65

மேலே