ஸ்டெர்லைட்

உயிருக்கு போராடுகிறது உப்பிட்ட நிலம்.
உறுத்தவில்லையோ உன் மனம்?

தாமிரம் உருக்கிடும் தொழிற்சாலையால்,
தாமிரபரணி மண் தரிசாய்போகுது.
புற்றுநோய் புழுங்கிடும் பகுதியானது.
நிலத்தடி நீரும் நிறம் மாறிபோனது.

உச்சநீதிமன்றமே! உன்முடிவு உசிதமானதா?
தமிழன் உயிர் வேடிக்கையாய் போனதா?

பாராததுப்போல் பாசாங்குச்செய்யும் ஊடகங்களே!
மௌனம் காத்திடும் மாநில அரசே!
செவி சாய்க்காதிருக்கும் மத்திய அரசே!
காந்தியின் குரங்குகளாகவே இருங்கள்.
அவர்கொள்கை கொண்டு பாடம் புகட்டுவோம்.

இனியும் பொறுமை காத்தோமானால்,
கந்தக டைஆக்சைடு காற்றில் கலக்கும்.
கடல்வளம் எல்லாம் கழிவாய் போகும்.
விளைவதெல்லாம் விஷமாய் இருக்கும்.
முத்துக்குளிப்பவர் முடமாய் போவர்.
பாபநாசமெங்கும் பிணங்கள் மிதக்கும்.

எழுதியவர் : கார்த்திக் (2-Apr-18, 6:07 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 71

மேலே