அறிவை விரிவு செய்

உறவுகள் பார்வை
உன் மேல் விழுந்திட...,
உன்னதன் நீ என்று
உலகம் புகழ்ந்திட...,

உன் விழிப்பட்டதும்
பணிவுகள் பிறந்திட
பண்மைக் கலைஞனாய்
நீயும் திகழ்ந்திட...,

அறிவை விரிவு செய்...!

அச்சத்தின்
உறைவிடம் நீக்கிட..,
நெஞ்சத்தில்
சுடரொளி ஏற்றிட..,
உச்சத்தின் உச்சமாய்
நீயும் திகழ்ந்திட..,
துச்சமென தூக்கி எறிந்தோரின்
கண்கள் கலங்கிட..,

அறிவை விரிவு செய்...!!

மடமையை மடமையாக்க...,
மனதினில் மகிழ்ச்சி பிறக்க..,
அறிவை விரிவு செய்..!

கண் தூங்கும் பொழுது
கனவுகளிலும்..,
துயில் நீங்கி பிறகு
கண்டவைகளிலும்..,

நீர் நிலையின் நிழல்களிலும்..,
நிழல் தரும் நிஜங்களிலும்..,
ஆதவனின் அனுபவத்திலும்..,
ஆழ்கடலின் ஆரவாரத்திலும்..,

அறிவை விரிவு செய்...!!!

பூத்திருக்கும் பூக்களிலும்..,
காத்திருக்கும் வண்டுகளிலும்..,
வெண்ணிலவின் பொலிவினிலும்..,
மண்மகளின் துகள்களிலும்..,

அறிவை விரிவு செய்...!

அன்னைத் தமிழின் அழகினிலும்..,
அந்நிய மொழியின் அத்தியாவசியத்திலும்..,
அறிவை விரிவு செய்...!

அரசியலின் ஆழத்திலும்..,
சினிமாவின் தூரத்திலும்..,
ஏடுகளின் எழுத்துகளிலும்..,
எழுத்தாளர் தரும் கருத்துகளிலும்..,

கடவுளின் கருணையிலும்..,
காந்தியின் பொறுமையிலும்..,
காற்றவளின் திறன்களிலும்..,
தோற்றவரின் தோல்வியிலும்..,

அறிவை விரிவு செய்..!!!

புண்பட்ட மனது பண்பட்டுபோக..,
விடுபட்ட கல்வி தேடிக்கற்று..,
அறிவை விரிவு செய்..!

கற்றலில் மட்டுமல்ல...
கற்ப்பித்தலிலும்....,
அறிவை விரிவு செய்...!!!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (3-Apr-18, 9:43 pm)
பார்வை : 3232

மேலே