தேவாலயம்
வீட்டை அலங்கரித்தவன் மன வீட்டை அலங்கோலமாகவே வைத்திருக்கிறான் மனிதன்.
கிறிஸ்துவ தேவாலயம் அருகிலே நடந்து வரும் போது அதன் வடிவமைப்பு அழகிலேயே மயங்கி இந்த வீடு மிக அழகாக இருக்கிறதே என்று நானும் வியந்தே கூற நண்பன் சொன்னான் அது வீடல்ல, தேவாலயம் என்று.
அப்படியென்றால் என்னவென்று கேட்டேன்.
இங்குதான் கிறிஸ்துவர்கள் இறைவழிபாடு செய்வார்களென்றான்.
இறைவழிபாடு செய்வார்களென்றால் இங்கு இறைவன் தங்கி இருப்பதாக நம்புகிறார்கள்.
அந்த நம்பிக்கையின் வழி இது இறைவனின் வீடு. ஆதலால், இதை வீடு என்று சொல்வதில் தவறென்ன? என்றேன்.
அருகில் நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்ற கிறிஸ்துவ பெண்மணி சிரித்துக் கொண்டே தேவாலயத்தில் நுழைந்தார்.
இன்னும் கொஞ்ச நேரம் உன் கிட்ட பேசிட்டு இருந்தால் எனக்கு பைத்தியமே பிடிக்கும் என்று கூறி நண்பனும் சென்றுவிட்டான்.
நானும் அவ்விடம் விட்டு நகன்றுவிட்டேன்.
மனம் மட்டும் அத்தேவாலயம் விட்டு நகரவில்லை.
அதை கட்டியவர் ஆண்டவனிடம் எவ்வளவு ஆத்மவிசுவாசம் வைத்துள்ளவராக இருந்திருப்பார்?
அது உண்மையான பக்தி.
உள்ளத்தின் அழகு.
இறைவா யாவும் நீ காட்டும் தரிசனம்.
உனது அன்பின் கரிசனம்.
எனது நெஞ்சே என்றும் உனது அரியாசனம்.