எட்டி இருப்பது

விட்டுவிட்டான் வெள்ளையன்,
சுட்டுவிட்டான் சொந்தக்காரன்-
கண்டோம் நாம்
காந்தியின் கதியாய்..
இந்திய மண்ணின்
இயல்பே இதுதான்..

அருகில் இருக்கும்
அரளிக் காயைவிட,
எட்டியிருக்கும் எட்டிக்காய்
எவ்வளவோ மேல்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Apr-18, 7:25 am)
Tanglish : etti iruppathu
பார்வை : 63

மேலே