உந்தன் கண்களின் அழகு என்னவளே

பெண்ணே உன் அங்கங்கள் ஒவ்வொன்றும்
அழகு, அழகு என்று சொன்னபோதும்,
நீ சிரிக்கையிலே தோன்றும் உந்தன்
கன்னங்களின் குழி பேரழகுதான் என்றாலும்,
அதோ உந்தன் உதட்டின் ஓரத்து மச்சம் ,
உன் முகத்திற்கு அழகு சேர்த்த்தாலும்,
நீ அணிந்த மேலாடை அழகு சேர்த்தாலும்,
நீ அணிந்த அணிகலன்கள் உன் அழகிற்கு
அழகு சேர்த்தாலும், என்னவளே, உன்னில்
நான் காணும் பேரழகு உந்தன் காந்த
கருவிழி கண்களில்தான்,அது பேசும்
மௌன மொழிகளில்தான்,அதில் நான்
காணும் நிலவின் தண்ணொளிதான்,இன்னும்
அதில் ததும்பும் உந்தன் அன்பின், பண்பின்
எதிரொலிதான் , ஏன் , என் அன்பே ,இன்னும்
சொல்வேன் உந்தன் இருவிழிகள் எனக்கு
உந்தன் இதயத்தின் தலை வாசல் என்றே
எனக்கு தோன்றுகிறது , என் அன்பே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (4-Apr-18, 8:35 am)
பார்வை : 141

மேலே