ஓவியத்திற்கு ஒப்பனையாய் அவளும் காவியத்திற்கு கற்பனையாய் நானும்

ஓங்குமலை காட்டிலென வாடையொடு தினந்தோறும்
தீங்குதனை சாடல்பட்டு கோடைவரை வனவாசம்...

மழைதவழ் கனைப்பரி விளைகனி தேடியோட
குழையமுதே நினைக்காண தளையறு நாடிநிற்க...

படைகூடி புடைசூழ விடைநாடி நடைதேடி
மடைநிறைய தடைபுணைய இடைநல்கி உடைகலைய...

பீடையாவும் ஆடைபோர்த்தி மேடையேறும் வாடைகண்டால்
ஓடைதாவும் தாடைமீனும் கூடையேறும் கோடைநாளில்...!

மனையுறை துய்மலரே நின்முகம் நிழலாட
உனைச்சேர மெய்யொழித்து தொன்மாவாய் விழநோக...

விரிதிரைப் பெருங்கடல் சிறைபனி சுமந்ததன்றோ...!
எரிமலைப் பெருஞ்சுடர் இறையடி கமழுமன்றோ...!

கொழுநன் மார்பொடு தழுவியநின் மேலாடை
விழுமென் தீர்வொன்று நழுவியபின் மேலாண்மை...

நுண்முள்ளாய் மிதமொடு பதமளித்த வெண்முகிலே
கண்ணம்புதைத்த கதவொடு நிதம்கொஞ்சும் பெண்மலரே...!

நகையறியோ குறுவிதழே வேல்விழியோ நறுமுகையே
பகையொழித்து தறுவிடுவாய் இல்லறத்தை பெறுவதற்காய்...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (4-Apr-18, 9:39 pm)
பார்வை : 64

மேலே