சீக்கிரம் சொல்லிவிடு...
உன் நினைவுகள்
நீர்த்து விடாதெனினும்...
நான்
உயிர் நீர்ப்பதற்குள்ளாவது
சொல்லிவிடு...
காதலிப்பதை விட
காதலை
சொல்லாமலிருப்பதில் தான்
என்னவொரு
ஒற்றுமை
நமக்கு..!
சொன்னால்
திருமணத் தண்டனை தான்
கிடைக்கும்...
சொல்லாவிடாலோ
வருத்தமெனும்
ஆயுள் தண்டனையே
கிடைக்கும்..!
காதலைச் சொன்னால்
சொப்பனங்களும்
சொல்லாவிடின்
வேதனை
கொப்பளங்களும் தான்
வரும்..!
மறுப்பேனென
மறைக்காமல்
மனம் திற...
மறக்கலாகாத
என்னையும்
தினம் பெறலாம்..!
பெண்ணுக்கான
கூச்சம்
என்னைத் தடுக்கிறது...
உனக்கேனடா
அச்சம்..?
கேளுங்கள்
கொடுக்கப்படுமென்பது
கடவுளிடம் மட்டுமல்ல
காதலியிடமும் தான்..!
இனியாவது
சீக்கிரம் சொல்லிவிடு...
காதலை மட்டுமல்ல
காதலிக்கவில்லை
என்றாவது..!