கவலை நமக்கெதற்கு
ஆமையைப் போல
அமைதியாய்
நடந்து வரும்
நம் மனித உரிமைகள், எப்போதும்
காலம் கடந்து வரும்—இல்லை
காலமடைந்துவிடும்
அடுத்தவருடைய
ஆன்மாவை, உரிமையை
பறிப்பது குற்றமென்று
பதிவாகியுள்ளது சட்டத்தில்,
சட்டமிருந்தும்—யாரும்
சஞ்சலப்படுவதில்லை
பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே –நம்
முன்னோர்கள்
குரல் கொடுத்தும்
இன்னும் அதே நிலை தான்
பின் கவலை நமக்கெதற்கு?

