கண்மணி

கண்ணே ,உந்தன் கண்களை
கள் ஏந்தும் விழிகள் என்பதா
மான் விழியென்பதா,கயல் என்பதா
தேன் சிந்தும் மலர்விழியாள் என்பதா
புரியாமல் விழிக்கின்றேன், நீயே
இதற்கொரு பதில் சொல்வாயா என்னவளே
என்றேன், அதற்கு ,அவள் சொன்னாள்
இந்த பழைய பாணி காதல் மொழி
நமக்கு எதற்கு, குறுக்கி வெறும் 'கண்ணே'
என்றே கூறலாமே, என்னவனே,அதில்
நீங்கள் சுகம் காணலாமே என்றாள்
என் 'கண்மணியவள்' !நான் அதிர
என் கவிநயம் சேர்ந்ததிர!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Apr-18, 4:25 pm)
Tanglish : kanmani
பார்வை : 95

சிறந்த கவிதைகள்

மேலே