சிட்டுக்குருவியின் சீடைகள்

சிட்டுக்குருவி அவர்கட்கு
நலம்.விரும்புவதும் அதே.
காணவில்லை உங்களை
நெடுநாட்களாக...
உங்கள் கவிதைகளும்
கிட்டவில்லை எதுவும்.
எப்பேர்ப்பட்ட பாடல்கள்.
சுவை மிகுந்த
முறுக்கு சீடைகள்.
புலியும் நரியும்
புன்னரி நாயும்
புகுந்து விளையாடும்.
பெண்களின் அங்கத்தில்
உவமை உவமருபுகளும்
மண்டித்தள்ளும்
கவிதைகள் அல்லவா...
இதனால் என்ன லாபம்
என்று கேட்டால்
பரணில் ஓடும் எலியை
கொலைவெறியுடன்
காண்பது போன்ற
உமது பார்வையும்
நெடிய கவிதைதான்.
எழுத வேண்டும்
நீங்கள் எனக்காக...
உங்களை விட்டால்
யாருண்டு சொல்ல.
கவிதை எப்படி
எழுதக்கூடாது
என்று காட்டுவதற்கு.

எழுதியவர் : ஸ்பரிசன் (6-Apr-18, 7:35 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 117

மேலே