நகுலன் எனும் அவர்
நகுலனை தெரியுமா?
பெரும் எழுத்தாளர்...
அவரை கேள்விப்பட்ட
வயதில் அவர் இல்லை...
சந்திக்க முடியாமல் போனது...
தெரிந்தவரை...
திருவனந்தபுரம்.
பேராசிரியர்.
கவிதை,கட்டுரை
நாவல்....
"இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்."
வாசித்து இருப்பீர்கள்...
அவர்தான்....
என்னால்
பார்க்க முடியாது போயிற்று.
நகுலன் என்றால்
நீல.பத்மநாபன்
அ.மாதவன் கூட தோன்றும்
என் நினைவுக்கு...
சுந்தர ராமசாமி...
அவரை மட்டும் பார்த்து
பழகி பேசி....
தத்து பிள்ளை என்று
கண்ணன் சொல்வார்...
உண்மைதான்...
நான் நாகர்கோயில்
சென்றால் அவரை
பார்க்காமல் வரமாட்டேன்.
நான் நாகர்கோவில்
செல்வதே அவரை
பார்க்க மட்டும்தான்.
நகுலன் பற்றி
அவர்தான் சொன்னார்...
வீட்டுக்கு வந்து
நகுலன் வாங்கி படித்தேன்
ஏன் படிக்க வேண்டும்
அவர் என்ன சொல்லிவிட்டார்?
ஒன்றும் புரியவில்லை.
ஆம்...ஏன் புரியவில்லை?
நகுலனுக்கு புரிந்த
நகுலனை நான்
நகுலனாக பார்க்க
நகுலனாகி படிக்கலாம்...
படித்த உங்களுக்கு
நகுலனை தெரியுமா?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
