சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 52 – சல்லரெ ராமசந்த் ருநிபை பூல ஸொம்பைந - ஆஹிரி

பொருளுரை:

பொழியுங்கள்! இராமச்சந்திரனின் மீது மலர்களைப் பொழியுங்கள்.

நிறைவு கொண்ட மனத்துடன் அழகிய பொற்கூடைகளில் நறுமணம் வாய்ந்த சண்பக மலர்களைப் (பெய்யுங்கள்).

தீச்செயல்களை விடுத்து நியமத்துடன் இலக்ஷ்மி நாயகனின் மீது தாமரை மலர்களைப் (பொழியுங்கள்).

இவ்வுலகில் தேவ பூசைக்குரிய மலர்களுள் மிகச் சிறந்த சாதிப் பூக்களைத் (தூவுங்கள்).

அளவற்ற பராக்கிரமமுடையவனும் சூரிய குலமெனும் கடலில் உதித்த நிர்மல சந்திரனுமாகிய ஹரியின் மீது இதயமெனுங் குமுத மலர்களைச் (சொரியுங்கள்).

பிரமனால் துதிக்கப் பெறும் சீதாநாயகனின் மீது கைநிறையப் பாரிஜாத மலர்களை (மழையெனப் பெய்யுங்கள்).

கணக்கற்ற ஜனன மரணங்களைத் தவிர்க்க, மனமார தியாகராஜனால் வணங்கப்பெறும் ஹரியின் மீது மலர்களைப் பொழியுங்கள்.

பாடல்:
பல்லவி:

சல்லரெ ராமசந்த் ருநிபை பூல (சல்லரெ)

சரணம்:

1. ஸொம்பைந மநஸுதோ நிம்பைந ப ங்கா ரு
க ம்பலதோ மஞ்சி சம்பகமுலநு (சல்லரெ)

2. பாமரமுலு மாநி நேமமுதோநு ர-
மா மநோ ஹருநிபைநி தாமரபூல (சல்லரெ)

3. ஈ ஜக திநி தே வபூஜார் ஹமௌ பூல
ராஜிலோ மேடைந ஜாஜி ஸுமமுலு (சல்லரெ)

4. அமிதபராக்ரம த் யுமணி குலார்ணவ
விமலசந்த் ருநிபை ஹ்ருத்குமுத ஸுமமுல (சல்லரெ)

5. தா த விநுதுடை ந ஸீ தாபதிபைநி
சேதுலதோ பாரிஜாத ஸுமமுல (சல்லரெ)

6. எந்நராநி ஜநந மரணமுலு லேகுண்ட
மநஸார த்யாக ராஜநுதுநிபைநி பூல (சல்லரெ)

யு ட்யூபில் Dr. Pantula Rama - Tyagaraja Aradhana 2010, VSKP – Sompainamanasutho என்று பதிந்து டாக்டர்.பந்துல ரமா பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Bombay Jeyashree-Ahiri என்று பதிந்து பம்பாய் ஜெயஸ்ரீ பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் MS Subbulakshmi- Challare-Ahiri-Thyagaraja என்று பதிந்து MS.சுப்புலட்சுமி பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் ML Vasanthakumari-Challare Ramachandru-Ahiri-Thyagaraja என்று பதிந்து ML. வசந்தகுமாரி பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Apr-18, 10:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 128

சிறந்த கட்டுரைகள்

மேலே