தாகத்தின் ஏக்கம்
யுகமே கலியுகமே...
காலங்காலமாய் காத்திருந்து
நாம் காலமாவது மட்டும் உறுதியாச்சு...
தண்ணீர் கேட்டு அரசிடம்
முறையிட்டு - ஏமாற்றமே
நம் வாழ்வின் முறையாச்சு...
கண்ணீருக்கும் இங்கே
தட்டுப்பாடு...
அழுது அழுது கரைஞ்சாச்சு
கருவிழி மட்டும் மிச்சமாச்சு...
நல்ல வேளை -
பாரதியும் காந்தியும்
உயிரோடில்லை...
பாரதத்தின் ஒற்றுமை கண்டு -
பாரதிபாட்டு கேட்போரில்லை
காந்தியின் வழி நடப்போரில்லை
அய்யா.....
சோற்றுக்கு கலப்படம் வந்தாச்சு....
காற்றுக்கும் கலப்படம் வந்தாச்சு...
தண்ணீரின்றி காயுது பூமி
தண்ணீர் கிடைச்சா விளைஞ்சிடும் சாமி...
உன் தேவைக்கு போக
பாக்கியை அனுப்பு...
நம் பேரன் பேத்தி
சுகமாய் வாழ பசியை போக்கும்
உணவைப்படைப்போம்.....
ஏக்கத்துடன்.....
உயர்திரு விவசாயி.