பரவசமானேன்
இரவை பகலாக்கும் மின்னலாய் மின்னும் மின்சார விளக்குகள் ஒளியில்!
தேகம் சிலிர்த்து கால்கள் தானாய் ஆட்டம் போடும் தாரை தப்பட்டை ஓசையில்!
குட்டி குழந்தைகள் குருவி பொம்மையை வாயில் வைத்து ஒலி எழுப்ப!
அனல் பறக்கும் அக்னி சட்டியை கையில் வைத்து கரவோசம் முழங்க!
பக்தி பரவசத்தில் கைகள் கூப்பி பத்தினி தெய்வத்தை வணங்க!
பரசவமான நானும் பாவை உன்னை கண்டேன் இந்த திருவிழா கூட்டத்தில்!!!
என்னை அறியாமல் என் கால்கள் உன்னை பின் தொடரும்!
கண்ணால் ஜாடை காட்டி கதைக்க என் இதயம் விரும்பும்!
பார்த்தும் பாராமல் பல கதைகள் உன் விழிகள் கூறும்!
அரும்பும் மலராய் அன்பே உன் புன்னகை எனக்குள் வாசம் வீசும்!
அனலின் சூட்டில் கூட அரும்பாய் மலர்கிறது என் முதல் காதல்
கணவன் மனைவி பொம்மை வாங்கி கடவுளிடம் நான் வேண்டுதல் வைத்தேன்!
கண்மணி உன்னை சேர கடும் தவமும் நான் புரிவேன்!!