வேசிகள்
அன்று கி.மூ நூற்றாண்டுகளில்
ரோமானிய மன்னர்கள்
ஆட்சி ஓங்கியிருந்த நாட்களில்
அண்டைய நாட்டு பகை கைதிகளை
அடிமைகளாய் கை,கால்கள் கட்டி
விலங்குபோல் தம் நாட்டிற்கு
இழுத்துவந்து காவலரையில்
விலங்குபோல் பூட்டிவைத்து
அவ்வப்போது மன்னவன் முன்னிலையில்
இந்த அடிமைகளை திறந்தவெளி
விளையாட்டு அரங்குகளில்
மக்கள் ஆயிர ஆயிரமாய்
திரண்டு வந்து பார்க்க
சண்டையிட, சண்டைக்கோழிகள்போல்
மோதவிடுவார் அதில் ஒருவர் இறக்கலாம்
இல்லை இருவருமே, அதைக்கண்டு
மன்னன் உட்பட அனைவரும்
ஆரவாரம் செய்வர்; தோற்றவனது
தலையும் கொய்து காலில் தள்ளி
விளையாடுவதும் இவர்கள் கேளிக்கை
இது அன்றைய சமுதாயத்தின் வெட்கக்கேடு ..
அது சரி, இத்தனையும் இங்கு நான்
கவிதையாய் கூறுவதில் நோக்கம்
பெண்களை வேசிகளாய் ஆக்கி
அவர்களை 'சிவப்பு விளக்கு' என்று
'பட்டம்' கட்டிய பகுதிகளில் ஒதுக்கிவைத்து
காமசுகங்குகள் அனுபவித்தபின்னர்
வீதியில் அவர்களைக் கண்டால் கூட
தீண்டாதவர்கள்போல் ஏசுவதும் நடுத்தவதும்
'நாகரீகத்தின் பிற்போக்கு என்றுதான்
கூறவேண்டும்,பாவம் யார் இந்த வேசிகள்
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட
'அபலைப் பெண்கள்','அனாதைகள்',
இல்லையென்றால், வறுமைக்கோட்டின்
எல்லையைத்தாண்டி, வயிற்றுக்காக
தங்கள் மானத்தையே விற்கத்துணிந்த
ஏழைப்பெண்கள், மற்றும் துச்சாதனன்
சிலரால் கொடுமையாய் கடத்தப்பட்டு
விபசார மனைகளில் விற்கப்பட்ட அபலைகள்
பாவம், ,தேவர் அடியார்கள், என்ற
பெயர் சூடப்பெற்று கோவில்களில்
உற்சவத்திருவிழாக்காலங்களில் ,இவர்கள்
இறைவனுக்கே தம்மை அர்ப்பணித்து
ஆடி, பாடிய பின்னும், இவர்களை
'தேவடியார்களாய்' இருக்கவிடாமல்
அங்கும் இரவுகளில் அவர்களை
விலைமாதர்கள் ஆகியது, சமுதாயமே
அதற்குமேல்'தேவடி என்று ஓர்
வசைச்சொல்லையும் உருவாக்கி மேலும்
இவர்களை இழுவுபடுத்தியது சமுதாயம்
ஒரு போதும் பெண் தன மானத்தை
தானறிந்து, இழக்கவிரும்புவதில்லை,
ஆனால் இந்த 'அபலைகளை'தங்கள்
ஆணவத்தால், ஆக்கிரமிப்பால்,பலத்தால்
'பலிக்கடாக்கள்' ஆக்கி ,'வேசிகள் '
ஆக்கிவிடுவது,,சமுதாயமே..............
அன்று ரோமாபுரியில் பகைக் கைதிகளை
இழுவுபடுத்தியது போல, இன்றைய
சமுதாயம் , அபலை பெண்களை
இழிவுபடுத்தி, வேசிகளாக்குவது ..
in English, we may call it 'retrograde trends
in civilization' தமிழில்' சமூக சீர்க்கேடு' என்பேன்
பெண்களை வேசிகளாக்குவது ஒழியவேண்டும்
அவர்கள் கற்பிற்கு உயர் மதிப்பு தரவேண்டும்
இது சமூகத்தின் பொறுப்பு,...........
கோயில் கோயிலாய், அம்மன் சிலைக்கு
தங்கத்தால், வைரத்தால் இழைத்து,
தங்கப்பூக்களால் அர்ச்சனைகள் செய்து
பெண்ணை சக்தியாய் பூஜித்து
நேர்த்திக் கடன்கள் எல்லாம் நிறைவேற்றி
வெளியே வந்தபின் பெண்ணை
காமம் கலந்த பார்வையில் பார்த்து
அவளை தப்பாக அனுபவிக்க விழையும்
ஆண்வர்க்கம் உண்டு..........................
இது கேவலம்........................
நம்மோடு பிறந்த அக்கா, தங்கை,
நமக்கு பிறப்பு தந்த அன்னை, நம் மனைவி
இவர்கள் அத்தனைப் பெரும் பெண்களே
இதை மனதில் இருத்தி, ஒருவனுக்கு ஒருத்தி
என்று வாழ்ந்து, பெண்மையை
காத்து, சீர்தூக்கி வைப்பது ஒவ்வோர்
ஆண்மகனின் கடமை.......................
பெண் என்றும் சக்த்திதான் , அவளை
காப்போம், போற்றுவோம்............
வேசிகள் வேண்டாம் சமுதாயத்திற்கு