இசைஞானி

பண்ணைபுரத்து ராசய்யா
உன் இசையை கேட்டால்
தென்றல்
சேலை கட்டிக்கொள்கிறது
பட்டாம்பூச்சிகள்
ரீங்காரமிடுகிறது
கடலலைகள்
ஜலதரங்கம் செய்கிறது

செவிகளின் அருமையை
உன் தெவிட்டாத இசையை
கேட்டப்பின் உணர்கிறேன்
பசியெடுப்பதில்லை உன்
பாடல்களை கேட்கும்போது

பூக்களெல்லாம் பாக்கள் எழுதி
உன்னிடம் மெட்டு கேட்கிறது
மூங்கிளெல்லாம் உன் மூச்சுக்காற்று
பட்டுவிடாதா என ஏங்குகிறது
உன் கொட்டாவி கூட ஒரு அலாபனை

இசையில் மயங்காத
இதயம் உண்டோ
இறைவனும் மயங்கிடுவான்
உன் இசையை கேட்டு
வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள
எனக்கு ஆசை அது
உன் இசையெனும் வெள்ளத்தில்

ராகதேவன்
இசைஞானி
மேஸ்ட்ரோ
கலைமாமணி
பத்மபூஷன்
தேசியவிருதுகள்
மாநில விருதுகள்
இவைகள் போதாது உனக்கு
காத்துக்கிடக்கிறது இன்னும் பல...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (9-Apr-18, 6:39 am)
Tanglish : isaignaani
பார்வை : 1282

மேலே