தொன்மை வரலாற்றின் மாறாத பிம்பங்கள்

வலி மறக்க போதை உண்டவன்
வழி மறந்து வேறு வீதியில் நடந்தான்
வழிப் பறியர்கள் இன்னும் இருப்பதையும் அடித்து
அவனையும் அடித்துப் போட்டுச் சென்றனர்
கதியற்றுக் கிடக்கிறான் சமூக வீதியின் வியாதி !

இன்னொரு வடிவம் :
வலி மறக்க போதை உண்டவன்
வழி மறந்து வேறு வீதியில் நடந்தான்
விழியில் அஞ்சனம் தீட்டி
இதழ்களில் லிப்ஸ்டிக் பூசி
இன்னும் பர்சில் பணம் இருக்கிறது
இந்த இரவை நுகர்வோம் பகிர்வோம்
வா என்று அழைத்துச் சென்றாள் அந்தப்புரத்து நாயகி !
ஒரே ஒரு வித்தியாசம்
ஒரு வியாபாரம் அரசின் அனுமதியுடன் நடக்கிறது
இன்னொரு வியாபாரம் அரசின் சட்ட விரோதத்தில் நடக்கிறது
இரண்டிற்கும் தொன்மை வரலாறு உண்டு !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Apr-18, 8:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே