ஒளிப்பதிவு

இப்பொழுதெல்லாம்
இரவு உறங்கும் முன்
மறக்காமல் ஆன் செய்து வைக்கிறேன்
என் மொபைல் வீடியோ ரெக்காடரை
கனவில் வரும் உன்னை
ஒளிப்பதிவு செய்ய வேண்டி

ஆனாலும் விடிந்து பார்த்தால்
எதுவுமே பதிவாவதில்லை
நீ வந்து சென்ற பிறகும்

எப்படி பதிவாகும்???

அதான் நீ போகும் போதே
வீடியோவை அழித்து விட்டு போகிறாயே

எழுதியவர் : ந.சத்யா (9-Apr-18, 3:50 pm)
பார்வை : 90

மேலே