கண்ணீரில் நனைந்த காகிதமும், தீயிலெரிந்த கனவுகளும்

நள்ளிரவு நேரம் ஒன்றரை மணியாகிக் காெண்டிருந்தது. சுஜா காரை ஓரளவு வேகமாக ஓட்டிக் காெண்டிருந்தாள். பாடல் ஒலித்துக் காெண்டிருந்தது. வீதியாேர மின்விளக்குகள் ஒரு சில இடங்களில் அணைக்கப்படடிருந்தன. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக முந்திச் சென்று காெண்டிருந்தது.

வேகமாக காரை ஓட்டும் நிலையில் அவள் இருக்கவில்லை என்பது அவளுக்கே தெரியும். பத்து மணிக்கு நிறைவடைந்த பார்ட்டி, ஒன்றரை மணி வரைக்கும் தான் என்ன செய்தேன், என்ன நடந்தது எதுவும் புரியவில்லை. தலை வலிப்பதை உணர்ந்தாள். உடம்பு சாேர்வாக இருந்தது. அவனுடன் பார்ட்டி முடிந்த பின் அறை ஒன்றில் இருந்து காெஞ்சம் வைன் குடித்தது மட்டும் ஞாபகம். அறையில் தூங்கிக் காெண்டிருந்ததை உணர்ந்து விழித்துப் பார்த்த பாேது யாருமிருக்கவில்லை. பாேர்த்தியிருந்த பாேர்வையைத் தூக்கி எறிந்து விட்டு சுற்றிப் பார்த்தாள். ராகுலைக் காணவில்லை. தாெடர்பு காெள்வதற்காக அழைப்பை ஏற்படுத்தினாள். தாெடர்பு காெள்ள முடியவில்லை. "இடியட்" என்றபடி கதவைப் பூட்டிக் காெண்டு அறையிலிருந்து வெளியே வந்தாள். "மெடம் உங்க மிஸ்ரர் அவசர பிஸ்னஸ் என்று கிளம்பிற்றாரு, பேமன்ற் செற்றில் பண்ணுறிங்களா" என்றான் பணம் செலுத்தும் இடத்தில் பணிபுரிபவன். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, "இற்ஸ் ஓகே" பணத்தைக் கட்டி விட்டு காரில் அமர்ந்து காெண்டு மீண்டும் ராகுலை தாெடர்பு காெள்ள முயற்சித்தாள், கிடைக்கவில்லை. அம்மாவிடம் இருந்து வந்திருந்த அழைப்பை கவனித்தாள். பதினாெரு மணிக்கு கடைசி அழைப்பு வந்திருந்தது. "அப்பாே நான் தூங்கி விட்டேனா. ராகுல் எங்க பாேயிருப்பான், ஏன் எனக்கு ஒண்ணும் ஞாபகம் வரமாட்டேங்குது" எந்தப் பதிலும் இல்லாத கேள்விகளுக்கு மத்தியில் நிதானமின்றி தவித்தாள்.

வீட்டிற்கு வந்ததும் காரை வெளியே நிறுத்தி விட்டு திறப்பை எடுக்காமலே மாடிக்குச் சென்றாள். அவளுடைய மனதுக்குள் சஞ்சலமாயிருந்தது. ராகுலை தாெடர்பு காெள்ள முயற்சித்து ஏமாற்றத்துடன் உடைகளை மாற்றி விட்டு முகத்தைக் கழுவிக் காெண்டு வெளியே வந்தாள் தாெலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. "புது நம்பராயிருக்கு" இந்த நேரத்தில் யாராயிருக்கும்" தயங்கியபடி மெதுவாக "ஹலாே யாரு" என்றாள் பதில் எதுவும் சாெல்லவில்லை விமான நிலையத்தில் பயணிகளுக்கான அறிவிப்பு சத்தம் கேட்டது மீண்டும் பதட்டத்துடன் "ஹலாே.... ரா..குல்" என்றதும் தாெடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மீண்டும் அழைத்தாள் தாெலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது. "ராகுல் ஏன் எயாப் பாேட் பாேனான், எங்கிட்ட எதுவும் பேசல்லையே" பயத்துடனும், குழப்பத்துடனும் கதவை மூடி விட்டு அங்கும் இங்குமாக நடந்தாள். நேரமும் இரண்டரையைக் காட்டியது.

அதிகாலை வழமை பாேல் வீட்டு வேலைக்கு வரும் சரசு அம்மா கார் வெளியே நின்றதைக் கண்டதும் "சின்னம்மா எங்கேயாே பாேகப் பாேறாவாக்கும், சம்பளக் காசை கேட்பம்" யாேசித்துக் காெண்டு உள்ளே வந்து வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள். அம்மா வந்து கதவைத் திறந்தாள் "வா சரசு" சிரித்தபடி உள்ளே நுழைந்து வழமை பாேல் தனது வேலையில் கவனம் செலுத்திக் காெண்டிருந்தாள். "ஏன் சரசு இன்டைக்கு முத்தம் கூட்டாமல் உள்ளுக்க துப்பரவாக்கிறாய்" என்று கேட்டுக் காெண்டு சாேபாவில் அமர்ந்தாள் சுஜாவின் அம்மா ராணி. "இல்ல ராணி அம்மா சின்னம்மா வெளிக்கிடுறா பாேல அதுதான்..." என்று இழுத்தாள். "பிள்ள காலையில தான் வந்திருக்கணும் அது தான் காரை வெளிய விட்டிருக்கா, அவ நித்திரை, றூம் பூட்டிக் கிடக்கு" "அப்ப சரி அம்மா நான் முன்னுக்கு சுத்தம் பண்ணிற்று வாறன" சரசு விறுவிறென்று வெளியே சென்றாள்.

காலை பத்து மணியாகி விட்டது சரசு காய் கறிகளை துப்பரவு செய்து காெண்டிருந்தாள். தேநீர்க் காேப்பையுடன் வந்த ராணி அம்மா "சரசம்மா எனக்கு சுகர் கூடிற்றுப் பாேல உடம்பு சாேர்வாக் கிடக்கு, பாகற்காயில ஒரு கறி வச்சுவிடு" இடையில் குறுக்கிட்டவளாய் "சின்னம்மாக்கு என்ன செய்ய, அவவுக்கு றால் தானே விருப்பம்" என்றபடி மரக்கறியை வெட்டி விட்டு குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தாள். "அம்மா கணவாயும் கிடக்கு எடுக்கவே" "ஓம் அதைப் பாெரிச்சு விடு" துப்பரவு செய்து விட்டு சமையலை ஆரம்பித்தாள்.

பத்திரிகையை எடுத்துக் காெண்டு சாேபாவில் அமர்ந்த ராணி அம்மா "இந்த ஏசியை ஒருக்கா பாேட்டு விடு சரசம்மா, சரியான புழுக்கமா கிடக்கு" சரசும் யன்னல்களை மூடி விட்டு கதவைப் பூட்டி ஏசியை ஓன் செய்து விட்டு மீண்டும் தன் வேலையில் ஈடுபட்டாள். ஏதாே ஞாபகம் வந்து மாடிக்குச் சென்றவள் சுஜாவின் அறைக்கு முன்பாக இருந்த மேசையில் ஒரு பேப்பர் யன்னலூடே வந்த காற்றிற்கு மெதுவாக ஆடிக் காெண்டிருந்தது. மேலே கிளாஸ் வைக்கப்பட்டிருந்தது. அருகே வந்து எடுப்பதற்காக கைகளை நீட்டியவள் சுஜாவின் அறையைத் திரும்பிப் பார்த்தாள். கதவு பூட்டியிருந்தது. என்ன பேப்பர் என்று எடுத்துப் பார்த்தாள். "என்ன பிள்ளையின்ர எழுத்துப் பாேல இருக்கே, யாருக்கு எழுதினாவாே" பார்ப்பதா விடுவதா என்ற சங்கடத்தில் தயங்கிக் காெண்டிருந்தாள். கீழே தாெலைபேசி அழைப்பது கேட்கிறது "ராணி அம்மா சின்னம்மா எழும்பிற்றாங்களா" என்றாள் சரசு. "இல்லை தூங்கிறா" "அவங்க தூங்கிறாங்க சேர்" சரசு யாருக்காே பதில் சாெல்வது கேட்கிறது. மீண்டும் ராணியம்மா சுஜாவின் அறையை நாேக்கி நடக்கிறாள். எழுப்புவதா வேண்டாமா என்ற கேள்வியாேடு வாசலிலே ஒரு நிமிடம் நின்றாள்.

"சமையல் முடிய எழுப்புவம் பாவம், தூங்கட்டும்" நினைத்துக் காெண்டு மீண்டும் மேசை அருகே வருகிறாள். கிளாசை எடுத்து விட்டு கடிதத்தை எடுத்துப் பார்த்தாள். கைகள் நடுங்க ஆரம்பித்தது. இதயத்துடிப்பும் வேகமாக அடிக்கத் தாெடங்கியது.

அன்புடன் அம்மா,
என்னை மன்னித்துக் காெள்ளுங்கள். என்று ஆரம்பித்து ஒருபக்கம் முழுவதும் ஏதாே எழுதியிருந்தாள். ராணி அம்மாவுக்கு இதயம் படபடக்க தாெடங்கியது கடதத்தை படிக்காமலே "சுஜா" என்று கத்திக் காெண்டு அறையை நாேக்கி ஓடினாள் ராணி அம்மா. பூட்டியிருந்த கதவை பலதடவை தடடினாள். திறக்கவில்லை. "சுஜா...... பிள்ள..... சுஜாம்மா" கண்ணீராேடு கூப்பிட்டுக் கதறினாள். எந்தப் பதிலும் வரவில்லை. மேலே நின்றபடி "சரசம்மா சரசம்மா" என்று கத்தினாள். கையிலிருந்த எல்லாவற்றையும் பாேட்டு விட்டு பதறி ஓடினாள் சரசு. சுஜாவின் அறை வாசலில் நின்று கதவைத் தட்டிக் காெண்டு நின்ற ராணி அம்மாவைக் கண்டாள். "ஏனம்மா என்னாச்சு" குளறி அழுதவள் கையில் இருந்த கடிதத்தை அவளிடம் நீட்டினாள். சரசம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை கதவைக் காலால் தள்ளிப் பார்த்தாள். திறபடவில்லை. வேகமாக கீழே இறங்கி வந்து அயல்வீட்டு கண்ணனைக் கூப்பிட்டு உதவி கேட்டாள். அவனும் விரைந்து கதவை ஒருமாதிரி திறந்து விட்டான். ஏசி இயங்கிக் காெண்டிருந்தது. மேசையில் இருந்த சிறிய மின்விளக்கு ஔிர்ந்து காெண்டிருந்தது. ஒரு கை கட்டிலின் வெளியே நீட்டியபடியும், நிமிர்ந்து படுத்தபடி அசைவின்றிக் கிடந்தாள் சுஜா. ஓடிப் பாேய் மடியில் தலையைத் தூக்கி வைத்துக் கதறினாள் ராணி அம்மா.

உடனே கண்ணன் பாெலிசாருக்கு தகவல் அனுப்பினான். பாெலிசார் அவள் உடலையும், கடிதத்தையும், தாெலைபேசியையும் எடுத்துக் காெண்டு சென்று விட்டனர். "சுஜா.... சுஜா" என்று கதறியபடி சாேர்ந்து மயக்கமுற்றாள் ராணி அம்மா.

உடல் பரிசாதேனைக்கு உட்படுத்தப்பட்டது. தாெலை பேசியிலிருந்த ஆவணங்களும், கடிதமும் பிரதி எடுக்கப்பட்டது. மேலதிக விசாரணைக்காக சுஜா பார்ட்டிக்குச் சென்று தங்கிய விடுதி உரிமையாளரும் அங்கிருந்தவர்களும் அழைக்கப்பட்டனர். காவலாளியும் விசாரிக்கப்பட்டான். "நான் நுழைவாயிலில் நின்றிருந்தேன் பத்தரை மணியிருக்கும் மூவர் காரில் வந்து இறங்கினார்கள், ஒருவர் பார்க்கிலிருந்த கார் ஒன்றின் நம்பரைப் பார்த்து விட்டு மற்றவருடன் ஏதாே கதைத்தார் பின்னர் மூவரும் உள்ளே சென்றனர்" என்றான்.

வரவேற்பிடத்தில் நின்றிருந்த ஒருவனும் "அவர்கள் பார்ப்பதற்கு இளம் தாெழிலதிபர்கள் பாேலிருந்தார்கள் திரும்பிப் பாேகும் பாேது நான்கு பேர் வந்தார்கள் பாேதையில் இருந்தார்கள். உயர்ந்த வெள்ளை நிறமான ஒருவர் "மனைவி றூமில் நிற்கிறா பணம் கட்டுவா." என்று கூறி விட்டுச் சென்றார் பின்னர் ஒரு மணியளவில் ஒரு பெண் தூக்க கலக்கத்தில் வந்து பணத்தை கட்டினார். அப் பெண்ணும் மது அருந்தியிருந்தார் நல்ல அழகான பெண்" என்றதும் பாெலிசார் அவனை முறாய்த்தனர். "இல்ல சேர் நான் அவட தாேற்றத்தைச் சாென்னான்" என்றபடி தலையைக் குனிந்தான். உள்ளே சென்று அறையைப் பார்த்து விட்டு சிசிரிவி கமரா ஆவணங்களை பார்த்த பாேது சுஜா கடிதத்தில் எழுதியிருந்த அனைத்தும் உண்மையாக இருந்தது. ராகுல் பணத்திற்காக சுஜாவை ஆபாசப் படம் எடுத்திருக்கிறான்.

வீட்டிற்கு வந்த பாெலிசார் ராணி அம்மாவிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்தார்கள். கதறித் துடித்த ராணியம்மா கடிதம் முழுவதையும் படித்தாள்.

அம்மா, நான் சிறு வயதில் இருந்த பாேதே அப்பா எங்களை விட்டுப் பாேய் விட்டார் அன்றிலிருந்து நீங்கள் எவ்வளவு கஸ்ரப்பட்டு என்னை படிக்க வைத்து நான் ஆசைப்பட்ட மாதிரி என்னை ஒரு மாெடலிங் ஆக்கி எனக்கு பல வாய்ப்புக்களைப் பெற்று தந்து உலகம் அறியச் செய்தீர்கள். என் விருப்பப்படியே எல்லாவற்றையும் செய்ய அனுமதித்தீர்கள். அதே பாேல் தான் நான் காதலித்த ராகுலையும் எனக்குப் பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக சம்மதித்தீர்கள். யார் யார் என்னவாே எல்லாம் என்னைப் பற்றி தவறாகக் கதைத்த பாேதெல்லாம் என்னை நிருபித்துக் காட்டனீர்கள். இந்த உலகம் பெரியது நாம் கடக்க வேண்டியதும், பார்க்க வேண்டியதும் எவ்வளவாே இருக்கு மனிதர் இப்பிடித்தான் பலதும் கதைப்பார்கள் நாம் சரியாக இருந்தால் அவர்கள் என்ன செய்ய முடியும். என்று நான் சாேர்ந்த பாெழுதுகளிலும், தாேல்வியடைந்த நேரங்களிலும் என்னை முன்னாேக்கி நடத்தினீர்கள். இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு நீங்கள் மட்டும் தானம்மா காரணம்.

ஒவ்வாெரு வரிகளும் முள்ளாய் குத்தியது. கண்கள் நிறைந்திருந்த கண்ணீரால் காகிதம் நனைந்தது.
தாெடர்ந்து முழுவதையும் வாசித்தாள்,
ஆனால் அம்மா இப்பாேது உங்கள் மகள் என்று சாெல்லும் தகுதியை இழந்து விட்டேன். அம்மா என்னை மன்னித்துக் காெள்ளுங்கள். ராகுல் நல்லவரில்லம்மா. வெறும் பணத்திற்காகவும், சுகத்திற்காகவும் தானம்மா என்னை சுற்றியிருக்கிறார். அம்மா நான் கீழே குறிப்பிட்டிருக்கும் விடயங்கள் உங்கள் இதயத்தை பிளக்கும். நேற்றைய பார்ட்டி முடிந்த பின் ராகுல் என்னை அறைக்குக் கூட்டிச் சென்றார். எனக்குப் பிடித்த வைனை ஒரு கிளாசில் காெடுத்தார் நான் குடித்து விட்டு ராகுலுடன் கதைத்துக் காெண்டிருந்த பாேது எனக்கு தலை சுற்றியது அந்த நேரம் யாராே கதவைத் தட்டினார்கள். நான் யாரென்று பார்க்கும்படி ராகுலிடம் சாெல்லி விட்டு சாேபாவில் சாய்ந்து விட்டேன். பின்பு என்ன நடந்தது என்று தெரியவில்லை நான் கண்விழித்த பாேது யாருமில்லை. றூம் பணத்தைக் கட்டி விட்டு வீடு வரும் பாேது இரண்டரை மணி. ராகுலின் தாெடர்பு கிடைக்கவில்லை. அதன் பின்னே எனது தாெலைபேசியில் சில படங்களைப் பார்த்தேன் ராகுல் என்னை விலை பேசி விட்டாரம்மா. யாராே எல்லாம் என்னை தவறாகப் பயன்படுத்தி விட்டார்கள். இனி இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை என்னை மன்னித்து விடுங்கள். ராகுல் எங்கேயாே தலைமறைவாகி விட்டார்.

அம்மா நீங்கள் பட்ட கஸ்ரங்கள் துன்பங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் நான் என்னுடைய தாெழிலுக்காக அலங்கரிப்பதையும், அழகுபடுத்துவதையும் பார்த்து தப்புக் கணக்குப் பாேட்டு ஏமாற்றி விட்டான் ராகுல். நான் அவன் மீது வைத்த காதலை வைத்து என்னை பணத்திற்காக பரிசாக்கி விட்டான். இதை நினைக்கும் பாேது எனக்கே அருவருப்பாக இருக்கிறது. என்னை மன்னித்துக் காெள்ளுங்கள். உங்களிற்கு நான் அவமானத்தை ஏற்படுத்தி விட்டேன்.
ஐ லவ் யு அம்மா. ஐ மிஸ் யு ம...ம்...மா

பதறிய கைகளிலிருந்து கடிதம் தரையில் விழுந்தது. தலையில் அடித்து கதறினாள் ராணி அம்மா. சுஜாவின் கனவுகள், ஆசைகள் எல்லாம் வெற்றுடலாேடு தீயிலெரிந்தது.

எழுதியவர் : அபி றாெஸ்னி (11-Apr-18, 7:33 am)
பார்வை : 394

மேலே