மஹாசோன பேய் The Demon of Mahasona

' மஹாசோன பேய்


மஹாசோன பிசாசின் தோற்றம் பற்றிய மரபு வழி வந்த கதை
ஒன்று உண்டு
.கிமு முதலாம் நூற்றாண்டில் இலங்கையின் கையின் தெற்கே இருந்த ருகுணு இராட்சியத்தின் இளவரசன் துட்டகைமுனுவின் படையில் பத்து பெரும் வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் நந்திமித்ரா , சுரானிமல கொதைம்பர, தேரபுத்தபாயா , மனம்பறன , வெலலுசுமன ,. கஹஞ்சதேவா . புஹுசதேவா . லபியாவசபா , மஹாசோன . அவர்களின் துணயோடு சோழமன்னன் எல்லாளனை துட்டகைமுனு போரில் வென்றபின் நாட்டில் ஒரே கொண்ட்டாட்டம் .போரில் வென்றதினால் விழாக்கள் தலைநகருக்கு மட்டுமல்ல. பல கிராமங்களிலும், மக்கள் கொண்டாடினார்கள். தளபதிகள் மற்றும் வீரர்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் கொண்டாட்டங்களை நடத்தினர். போர் நடந்த அநுராதபுரம் நகரம் , விழாக் கோலம் பூண்டது .(ஈழத்து இறுதி போரின் பின் நடந்தது போல் _

அந்த பத்து வீரர்களில் தேரபுத்தபாயா போரின் பின் துறவறம் பூண்டான் ( அசோக சக்ரவர்த்தி போல்) . அவனைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். அவர்கள் எல்லோரும் மது அருந்தினார்கள் , மகிழ்ச்சியுடன் உணவு உண்டார்கள். சிலர் நடனமாடினார்கள் ., கொதைம்பரவின் இல்லத்தில் பெரிய விழா நடந்தது கொதைம்பரவின் சிறந்த நண்பன் மஹாசோன.

மஹாசோன, சண்டைக் கலைகளை நன்கு அறிந்தவனாக இருந்தான். அவரன் ஒரு நல்ல மல்யுத்த வீரனாகவும் இருந்தான். புதிய முறையில் , கரடி வேட்டையாட அவன் விரும்பினான். ஒரு அம்பையும் வில்லையும் பாவித்தொ அல்லது ஒரு ஆயுதத்தை பாவித்தோ அவன் ஒரு கரடியை வேட்டையாடவில்லை . அதற்கு பதிலாக அவன் கரடியின் கோபத்தை தூண்டி அதோடு மல்யுத்தம் செய்வான் .அது களைத்தவுடன் பின்னர் அவன் அதை கொன்றுவிடுவான் .

கொன்ற கரடியின் தோலினால் மஹாசோன, தலையில் இருந்து கால் வரை தன்னை மூடி, உண்மையான 'கரடி நடனம்'ஆடுவான் . பலர் இந்த நடனத்தைக் பார்த்து ரசித்தனர்.
.
மஹாசோனவும் கோதிமபாரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் , கோதிமபராவின் வீட்டில் நடக்கும் கொண்டாட்டங்களில் மஹாசோன முக்கியமாக கலந்து கொள்வான் . கோதிமபராவின் வீட்டில் விருந்தினரராக வந்த அனைவருமே அவனுடைய மனைவியால் அன்பாக நடத்தப்பட்டனர்.

இந்த விழாவில் பிரதான அழைப்பாளர் நந்திமித்ரா. அங்கு கூடியிருந்த அனைவரும் அவரை மதித்தனர் . . கோதிமபராவின் வீட்டில் நடந்த விழாவில், மஹாசோன நிறைய மதுவை அருந்தினான் அவன் வரம்பை மீறி குடிக்கும்போது, அவனுடைய நண்பர்கள் அவனை குடிப்பதை நிறுத்தும்படி அறிவுறுத்தினர், ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை. அவனால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவன் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருந்தான் . மிகவும் அழகான கோதிமபராவின் மனைவியின் கைகளை பிடித்து மஹாசோன இழுத்தான் அவள் கோபத்தில் அவனின் கைகளை உதறிவிட்டுச் சென்றாள் .. மஹாசோன அவளுக்குப் பின்னால் மீண்டும் போய் அவள் மேல் கை வைத்தான் . அவனைத் தடுக்க முயன்ற மஹாசோனவின் நண்பர் ஒருவர் , தோல்வி அடைந்தார். மஹாசோன அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்தான் அதனால் ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது.

கோதிமபரா இதைக் கவனித்தான். அவன் மஹாசோனவின் நண்பன் என்பதால் சிறிது நேரம் பொறுத்துக் கொண்டான். மஹாசோன வரம்புக்கு அப்பால் சென்றபோது கோதிமபரா தனது பொறுமையை இழந்து மஹாசோனவை தாக்கினான் .

மஹாசோனவும் கோதிமபராவோடு எதிர்த்து போராட முயன்றான் . பின்னர் இருவருக்கும் இடையில் நடந்த சண்டையில் நண்பர்கள் தலையிட்டு நிறுத்தினர் . அந்த சண்டையின் விளைவாக, விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நல்ல உணவு, மற்றும் பானம் எல்லாம் நிலமேல்லா சிதறியது . அந்த வீடு ஒரே குழப்பத்தில் இருந்தது.

கோதிமபரா இல்லத்தின் வீட்டில், ஏற்பட்ட குழப்பத்தில் சில நண்பர்கள். இரு பகுதிகளாக பிரிந்து எதிரிகளானார்கள் .

சிலர் சண்டையை தடுக்க முயன்றாலும், அது பயனளிக்கவில்லை . எல்லாவற்றையும் மௌனமாகக் கவனித்த நந்திமித்ரா, எல்லோரும் சண்டை போடுவதைக் கண்டு உரத்த குரலில் “உங்கள் சண்டையை நிறுத்துங்கள்” என்று சத்தமிட்டார். எல்லோரும் வியப்படைந்தனர். அவர்கள் உடனே சண்டை போடுவதை நிறுத்தினார்கள்.

நந்திமித்திரா பின்னர் கோதிமபாரா மற்றும் மஹாசோன ஆகியோரிடம் சென்று, "நீங்கள் சண்டையிட விரும்பினால், அதற்கு இதுவல்ல இடம. . துட்டகைமுனு ராஜாவின் அனுமதியுடன் ஒரு இடத்தை நான் ஏற்பாடு செய்து, விவரங்களை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அங்கு இருவரும் சண்டை போட்டு உங்கள் வீரத்தைக் காட்டுங்கள் “ என்றார் நந்திமித்திரா பின்னர் மஹாசோனவின் நண்பர்களை அவனை அழைத்துச் செல்லும்படி சொன்னார் . அவர்கள் நந்திமித்திரா சொன்னபடி செய்தார்கள். விழா முடிவடைந்தது..
****
நந்தமித்ரா மன்னன் துட்டககைமுனுவைச் சந்தித்து நடந்தது எல்லாவற்றையும் சொன்னார் . சண்டைக்கு ராஜா அனுமதி கொடுத்தார். ஒரு தேதியும், ஒரு இடமும் முடிவு செய்யப்பட்டது.
இருவரும் சண்டையிட முன் மேலும் பயிற்சி பெற்றனர். இதற்கிடையில், நந்திமித்ரா அந்தப் போராளிகளைப் சண்டை போடவிருக்கும் இடத்தை அலங்கரித்து, இரு தரப்பிலும் ஆதரவாளர்களும் அமர இடங்களை ஏற்பாடு செய்தார்.

வீரன் சுரானிமல நீதிபதியாக நியமிக்கப்பட்டான். போட்டிக்கு நியமிக்கப்பட்ட நாளன்று ஒரே கூட்டம், கோதிமபராவும் ஆரம்பத்தில் நண்பர்களோடு வந்து சேர்ந்தான். மஹாசோனாவும் அவனது நண்பர்களோடு சேர்ந்து வந்தான். சண்டை தொடங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. இரண்டு போட்டியாளர்கள் மையத்தில் நின்று - அங்கு கூடிஇருந்த மக்களுக்கு வணங்கி அவர்களுகிடையே சண்டையை ஆரம்பித்தனர் . சரியான போட்டி .

இருவரும் கிட்டத்தட்ட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் மோதிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் கீழே போட முயற்சித்தார்கள். அவர்கள் இருவரும் சம பலம் உள்ளவர்கள் ஒரு சமயம் இருவரும் கட்டிப்பிடித்தபடி நின்றனர், சுரானிமல அவர்களை பிரித்தார். (இக்காலத்தில் குத்துச் சண்டை வீரகளை நடுவர் பிரிப்பது போல் )

கோதிமபாரா இந்தத் தாக்குதலைத் தவிர்த்து, மஹாசோன பக்கம் அவனை தாக்கத் திரும்பினான். மஹாசோன தான் பயந்தது போல் ஏமாற்றி . எதிரியை சண்டைக்கு இழுத்தான். சண்டை நீண்டது , பார்வையாளர்கள் சலிப்படைய ஆரம்பித்தார்கள். மகாசோன பாய்ந்து கோதிமபாரவுக்கு ஒரு பெரிய அடியை தன் கையால் கொடுத்தான்.

கோதிமபாரா மகாசோனவை உயரத் தூக்கி எறிந்தான்., மகாசோனஅதை எதிர்பார்கவில்லை ,. அவன் பதிலுக்கு கோதிமபாராக்கு ஒரு பெரும் அடி கொடுத்தான்.. கோதிமபரா உடனே தன் காலை பயனபடுத்தி மகாசோனவின் தலயில் உதை கொடுத்தான் . அந்த உதையின் வேகத்தில் மகாசோனவின் தலை துண்டிக்கப்பட்டு தூரத்தில் போய் விழுந்தது. மகாசோன தலை இல்லாத முண்டமானான்.
போட்டி முடிவடைந்தது. கூட்டம் கலைந்து

மகாசோனவின் நண்பர்களும் ஒருமித்து மகாசோனவின் தலையில்லாத முண்டத்தை கல்லறைக்கு எடுத்து சென்றனர் .தலை இல்லாத முண்டத்தின் தலையில் ஒரு கரடியின் தலையை பொருத்தினார்கள். மற்றும் மகாசோனவின் உடலை ஒரு கரடியின் தோல் கொண்டு மறைத்தனர். அந்த சடலம் கரடி தலையோடு ஒரு மரத்தின் மீது சாய்ந்த நிலையில் வைக்கப்பட்டது மாலையில், அந்த இடத்துக்கு வந்த கிராமத்தினர் அதைப் பார்த்து அச்சம் கொண்டு கூச்சலிட்டனர், அது ஒரு வித்தியாசமான உயிரினம் என்று நினைத்துக்கொண்டனர். பயந்து அவர்கள் ஓடிவிட்டார்கள். பின்னர். ஒரு பேய் கூத்து ஆடும் - கலைஞரை அவ்விடத்துக்கு கூட்டி வந்தனர், அவரை 'தோவல்' நடனம் ஆட வைத்தனர்

இலங்கையில் கிராமப் புற மக்கள் பிசாசுகளில் அதிக நம்பிகை உள்ளவர்கள். தென் மேற்குக் கரையோரப் பகுதிகளில் வாழ்பவர்களிடையே தொவில் நடனம் எனப்படும் பேய் கூத்து பிரசித்தமானது. அழகான முகமூடி அணிந்து மேளத்துக்கு ஏற்ப ஆடுவார்கள். பல வடிவங்களில் முகமூடிகள் உண்டு. சுற்றுலாப் பயணிகள் அதிக விலை கொடுத்து அவைகளை வாங்கி செல்வார்கள் . அவர்களுக்கு அந்த பேய் கூத்தின் அர்த்தம் புரியாது

தொவில் நடனம் ஆடுபவர் சாராயம் குடித்தபின் கல்லறைக்கு முன் உருக் கொண்டு ஆடி போது அவர் உரத்து சத்தம் போட்டு சொன்னர “'நான் கண்டேன்! நான் கண்டேன்!! மகா சோனாவின் ஆவியைக் கண்டேன் ' . இது மிக பெரிய பிசாசு . மஹா சோனாவின் ஆவி மாமிசத்தை தேடுது. சாராயம் தரச்சொல்லி கேட்கிது. ஆடு அல்லது கோழி இறச்சி தரட்டாம் . சமைத்து . பொங்கி தனக்குப் படைக்கட்டம் கொடுக்காவிட்டால் ஊரில் பலரை பலி வாங்குமாம்.” மஹாசோனா பேய் என் கண்களுக்கு 122 அடி உயரம் நான்கு கண்கள், . நான்கு கைகள், நீண்ட இரு பற்கள் இருப்பதை தெரியுது , அதன் தோல் கருப்பு நிறத்தில் தெரியுது . அதுக்கு ஒரு கரடியின் தலை இருக்கு “பூசாரி பேயை வர்ணித்தார் . மக்கள் பயத்தில் நம்பினார்கள்.. அன்று பிறந்தது மஹாசோனா என்ற கல்லறைப் பிசாசு மேல் கிராம மக்களிடையே நம்பிக்கை.
.
****
(இது ஒரு கிமு 1 ஆம் நூறாண்டு கிராமீய மரபுக் கதை)

எழுதியவர் : ( பொன் குலேந்திரன் - கனடா ) (11-Apr-18, 6:34 am)
பார்வை : 159

மேலே