கொலைகாரி

குடையில் மழையின் சத்தம்
இதயக் கிடங்கில் உந்தன் முத்தம்
தடயம் அற்ற கொலைகாரி
எந்தன் தாயை வென்ற கொடையாளி

பார்க்கும் திசையில்
பட பட பட எனவே
பூக்கும்
தாமரை மொட்டுக்கள் உடனே

கேட்கும் இடியில்
என் இதயம் நடுங்கும்
அங்கு தோன்றும் காட்சி
கண்களைத் திருடும்

பிறந்த சிசு
மௌனமென
அச்சுறுத்தும்
உன் மௌனமடி
அழுதுவிடு
தாயின் அழுகை அணைத்துவிடு
மெலுகெனவே
கண்கள் உருகின போதும்

பேசாயோ
பொன்னிலவே
இவ்விரவும்
மெளனத்திலோ
வீணையின் நரம்புகள் போல்
அலைகளை மீட்டுகிறாய்
இசை போதுமடி
உன் குரல் வேண்டுமடி

எழுதியவர் : ஓஷோ சிறிரதி (11-Apr-18, 10:02 am)
Tanglish : kolaikari
பார்வை : 106

மேலே