பொன்மாலைப் பொழுது

கார்முகில் நிழல் பதியும்
உறைந்து போன கடல்
உன் கூந்தல்
அது காற்றினில் குழுங்கையில்
பூமியின் காந்தப்புலங்கள்
கதறுதடி
நட்சத்திரத்தை
ஈன்றுகொண்டிருக்கும் கருந்துளை
உன் கண்மணி
பாலைவனத்தின் மணல் போல்
என் மனம்
பற்றற்றது
நீ காட்டும் திசையில்
பறவை போல்
சிறகுற்றது
வெளிநேர ஆடையினிலே
வழிந்தோடும் நூல்
புவியீர்ப்பாம்;
காற்றில் ஆடும் ஆடை
அதில் கலங்கும்
உன் தாய்மை
அவளின் கறுத்த நகங்கள்
இரணியனைப் போல்
சித்தாரைக் கிழித்து
கிழித்து
குருதிக்கடலாய்
இசையைப் பெருக்கெடுக்கவைத்தன
அந்தப் பொன்மாலைப் பொழுதில்