அப்பா

மரங்களுக்குள்
நதி போல் பாய்ந்த காற்று
கூட்டில்
வேர்த்து
களைத்திருந்த ஒரு பறவையை
ஆறுதல் படுத்தி
சில மலர்களைக் கொய்துகொண்டு
வண்ணத்துப்பூச்சிகளோடு
ஓடிப்பிடித்து விளையாடி
கடந்துபோனது

மாலை
வேலை முடிந்து
வீட்டுக்குத் திரும்பி வரும்
என் தந்தை
என்னோடு விளையாடி
பின்
சிறிது நேரத்திலேயே களைத்து
சாய்மனையில் போய்
விழுந்து உறங்குவதைப் போல்

எழுதியவர் : ஓஷோ சிறிரதி (11-Apr-18, 10:04 am)
Tanglish : appa
பார்வை : 352

மேலே