மணமாகாத மாலை

பிடித்த உறவுகளுக்கெல்லாம் மாலை
தொடுத்தால் மணமாலை ஆகிவிடாது
ஆகவும்கூடாது என்று தான் ஆண்டவன்
விதித்தான் வேறுபாடுகளை - அவை
பால் ,பண்பாடு , வயது ,சாதி ,இனம் ,மதம், மொழி இவைகளின் பாகுபாடு

அன்புக்கும் வடிவம் உண்டு
அர்த்தமும் உண்டு..
மாலை சூடாதவை,சூடமுடியாதவை
பூச்சரத்தில் ஒரு பூவாய்
புது உறவு பேர் சூட்டி வாழ்ந்து நகர்கிறது...

எழுதியவர் : யாஷி (11-Apr-18, 3:19 pm)
பார்வை : 164

மேலே