காதல்

" உன் காதலுக்கு என்னவளே
உனக்கு இந்த உலகையே
உன் கால்களில் காணிக்கையாய்
வைப்பேன்" என்றான் மாமன்னன்,
மாவீரன் சீசர் ,காதலி க்ளியோவிற்கு,
என்னவள் கேட்டாள், "என் மன்னவனே
நம் காதலுக்கு நீ தரும் பரிசுதான்
என்னவோ என்றால்" வேடிக்கையாக
அதற்க்கு நானும் சளைக்கவில்லை
கூறினேன்,


என்னவளே என் மீது நீ கொண்ட
காதலுக்கு நான் உன்னை, நம்
தேன்நிலவிற்கு, அந்த நிலவுக்கே
கூட்டிச்செல்வேனடி அது சாத்தியம்
என்றால்.......................என்றேன்
பல்சுளுக்க................

அவளோ விட்டப்பாடில்லை, கேட்டாள்
தொடர்ந்து, என்னவனே,:" மும்தாஜின்
நினைவில் ,முகலாய மாமன்னன்
உலக அதிசயம்'தாஜ்மஹால் கட்டினான்:"
நான் இறந்தால், என் நினைவில் நீ
கட்ட நினைப்பதும் உண்டோ, என்றால்,
அதற்கு நான் ," எனக்கு இந்த கல்லறை,
நினைவாலயம் என்பதில் நம்பிக்கை
ஏதும் இல்லை என்றேன்,...................
அவள் அதற்குமேல் ஏதும் பேசவில்லை
மௌனமானாள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Apr-18, 11:09 am)
Tanglish : kaadhal
பார்வை : 259

மேலே