கிராமிய கவிதை
இதமான தென்றல்
மல்லிகைப் பூ வாசத்தை வருட
என்னை சாய்த்து போகும்
என் அழகிய மலரே
உன் தீண்டுதலாலே
குழந்தை உணர்வு வந்துவிட்டதே -பூங்குயிலே
உன் மென்மையின் பொருள் என்ன தான் என்று கூறி தான் போவாயா
என் மீது பொய்களை அடுக்கி அடுக்கி கூறி
என்னை மயக்க பார்க்கிறியே -என் ஆசை மச்சானே
ஏய் பிள்ளை நிசமாக உன் அழகிய விழிகள்
என்னோடு முட்டி மோதி உன்னை காண ஏங்கையிலே
அதை மறைச்சு வைக்க முடியாமல்
தவியாக தவித்து நிற்கிறேனே
போடா கிறுக்கா
உன் துணைக்கு நானிருக்கேன்
ஒடி வந்து உன்னை கட்டிபிடிக்கவா
என்னையும் கூட்டி செல்கிறாயா
ஆனாலும் வீட்டாரை நினைக்கையிலே
பயம் பாடாபடுத்த
தடுமாறி மயங்கி தவிக்கிறேனே -மச்சானே
நான் விரும்பிய மலரே
வீட்டாரின் சொல் கேட்டு
புத்தி கேட்டு போகாமல்
மச்சானை நம்பி கட்டிகொள்ளடி
முழு நாளும் சிரிச்சுக்கடி
உன்னை வந்து கூட்டி கொண்டு போறேனடி