மூவர்
சரஸ்வதிக்கு ( சரசு) மிகக் கவலை தன்னையும் செல்வாவையும் கடைசிக் காலத்தில் கவனிப்பதுக்கு ஒரு மகள் இல்லையே என்று.. சரசு வின் கணவன் செல்வேந்திரன் (செல்வா) லண்டனில் படித்து பட்டம் பெற்ற சார்டேர்ட் அக்கௌன்டன்ட் . லண்டனில் ஐந்து வருடங்கள் வேலை செய்து அதன் பின் சரசுவை திருமணம் செய்து கொழும்பில் பெரிய நிறுவனத்தில் பிரதம அக்கௌன்டன். வேலை . வெள்ளவத்தையில் கொலிங்வுட் பிலேசில் அவருக்கு சீதனமாக கிடைத்த நாலறைகள் உள்ள வீடு இருந்தது. அவர் சரசுவை திருமணம் செய்த அதிர்ஷ்டமோ என்னவோ அவருக்கு திருமணத்தின் பின் ஒரு வருடத்தில் உலக வங்கியில் வேலை கிடைத்தது. நல்ல சம்பளமும். சலுகைகளும். ஒவ்வொரு வருடமும் லீவில் குடும்பத்தோடு கொழும்பு திரும்பும் போது விமானத்தில் முதலாம் வகுப்பில் பயணம் . பல நாடுகளில் வேலை செய்து பல இன மக்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியது. சரசு பாராத தேசம் இல்லை .செல்வா தம்பதிகளுக்கு சிங்கப்பூரில் செல்வா வேலை செய்யும் போது ஜெயேந்திரன் ( ஜெயம்) பிறந்தான் . அதன் பின் அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை . அது செல்வாவுக்கும் சரசுக்கும் பெரும் கவலை.
பொருயியல் பாட்தாரியான ஜெயம் இலங்கை பரிபாலன சேவையில் திறைச்செரியில் வேலை . அவனோடு பல்கலை கழகத்தில் படித்த சுபத்திராவை பெற்றோரின் அனுமதியோடு திருமணம் செய்து கொண்டான். பாவம் சுபத்திரா . இனக் கலவரத்தில் பெற்றோரை இழந்தவள் . கூடப் பிறந்த சகோதரங்கள் கூட இல்லை. அவளுக்கு ஜெயத்தின் தாயும் தகப்பனும் தான் எல்லாம். சுபத்திரா ஜெயத்தை திருமணம் செய்ய முன்பு மாமி மருமகளை கொடுமை படுத்திய கதைகள் பலஅறிந்திருந்தாள். சில விவாகரத்தில் கூட பொய் முடிந்ததை பலர் சொல்லிக் கேள்விபட்டாள் . சினிமாவிலும் பார்த்திருக்கிறாள் . தனக்கு வரும் மாமி எப்படி யானவளோ என்று யோசித்தாள் சுபத்திரா . எதற்கும் வரும் மாமியோடு பணிந்து போக வேண்டும். தனக்கோ தாயும் தகப்பனும் ஒரு சகோதரமும் இல்லை. ஜெயம் குடும்பம் தான் இனி எல்லாம்
செல்வா ரிட்டையாராகி கொழும்பு திரும்பி அடுத்த வருடமே ஒரு நாள் திடீர் என ஹார்ட் அட்டாக் வந்து மரணத்தை தழுவினார் . சரசு அதை எதிர்பார்க்கவில்லை . கொழும்பு வீட்டில் சரசு, ஜெயம் சுபத்திரா மட்டுமே வாழ்ந்தார்கள். சரசுவுக்கு பென்ஷன் வந்தது . சுபத்திரா கொழும்பில் ஒரு கல்லூரியில் அறிவியல் ஆசிரியை . வீட்டையும் சரசுவையும் கவனிக்க அவளுக்கும் ஜெயத்துகும் நேரமில்லை. சுரசுவுக்கோ . கீல்வாதம்( Arthritis). அவலாள் அசைந்து வேலை செய்வது கடினம் . வீட்டு வேலை பார்ப்பதுக்கும வார நாட்களில் சமைப்பதுக்கும் ராஜம்மா வந்து போவாள். லீவு நாட்களில் சுபத்திரா சமைப்பதுண்டு. சரசு சுத்த சைவம் என்பது சுபத்திராவுக்கு திருமணம் நடந்த நாள் முதல் கொண்டே தெரியும். தாயைப் பற்றிய முழு விபரமும் ஜெயம் சுபத்திராவுகு சொல்லியிருந்தான் . தன் தாய் சரியாக அனுஷ்தானம் பார்பவள் கச்சிதமானவள். துப்பரவு பார்ப்பவலள் என்று சுபத்திராவுக்கு எச்சரித்திருந்தான் . ஜெயத்துக்கோ மீன். இறச்சி இல்லாவிட்டால் உணவு போகாது . வீட்டில் வெவ்வேறு பாத்திரங்களில் சமையல் நடக்கும்.
தாயில்லலா சுபத்திராவின் மேல் அவளின் மாமிக்கு தனிக் கரிசனையும் அன்பும் . சரசுவுக்கு மகள் இல்லாத குறையை மருமகள் சுபத்திரா தீர்த்து வைத்துவிட்டாள் என்ற மனத் திருப்தி. மகனுடன் கோபித்து பேசினாலும் ஒரு போதும் மருமகளோடு சரசு கோபித்தது இல்லை. அதற்கு ஏற்றவாறு சுபத்திரா நடந்தாள். மாமியின் போக்கினை சுபத்திரா எதிர்பர்க்கவில்லை
“ அம்மா நீ எனக்குத் தாயில்லை , சுபிக்கு தான் தாய் போல எனக்குத் தெரியுது . எனக்ககும் அவளுக்கும் ஏதும் பிரச்சனனை என்று வந்தால் நீ அவளுக்கு சார்பாக தான் பேசுவாய் ச. இது எனக்கே ஆச்சரியமாக இருக்கு.” ஒரு நாள் செல்வா தாயுக்குச் சொன்னான்.
“ மகன், சுபி பெற்றோரும் சகோதரங்களும் இல்லாதவள். பாவம் அவள் . தனித்து எங்களை நம்பி எங்கள் குடும்பத்துக்குள் வந்திட்டாள் . எனக்கு மகள் இல்லாத குறையைத் தீர்த்து வைத்து விட்டாள். எனக்கு நேரத்துக்கு மருந்து தருகிறாள். வாயுக்கு ருசியா சமைத்து தருகிறாள். ஒவ்வொரு வெள்ளிகிழமையும் என்னை என் கை பிடித்து கோவிலுக்கு அழைத்து செல்கிறாள் . என்னோடு விரதம் இருக்கிறாள். நான் சாப்பிடும் பொது பக்கத்தில் இருந்து கவனிக்கிறாள்.. என் படுக்கையை தினமும் சரி சியது விரித்து துப்பரவாக வைக்கிறாள் ;. கீழ் வாதத்தால் கஷ்டப்படும் எனக்கு குளிபாட்டுவதும், தலை சீவி விடுவதும் அவளே. எதோ முற் பிறவியில் அவள் எனக்கு மகளாய் பிறந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் . உன் அப்பா இருந்திருந்தால் அவரையும் மகள் போல் இருந்து கவனித்திருப்பாள்” சரசு மகனுக்கு சொன்னாள்.
“ என் நண்பன் காந்தன் வீட்டில் எப்பவும் அவன் மனைவிக்கும் அவனின் தாயுக்கும் சண்டை. ஒரு நாள் காந்தனின் மனவி தான் தன் தாய் வீட்டுக்குப் போவதாக அவனை மிரட்டி இருக்கிறாள். பாவம் அவன்” செல்வா சொன்னான்
“காந்தனின் அம்மாவைப் பற்றி எனக்குத் தெரியும். அவள் புருசனோடும் எப்பவும் சண்டை அவளுக்கு காந்தன் ஒரு மகனும் இரு மகள்மார் மட்டுமே . இருக்கிறார்கள். அவளுக்கு மகன் மேலே சரியான பாசம். எங்கே அந்த பாசத்தில் மருமகள் பங்கு போடுவாளோ என்ற பயமாக இருக்கலாம். அதோடு மருமகள் அவள் கேட்ட சீதனம் கொண்டு வரவில்லை என்ற குறை வேறு காந்தனின் சகோதரிமாரின் தலையீடும் இருப்பதாகக் கேள்வி பட்டேன் . காந்தனின் சம்பளத்தில் தாய் பங்கு கேட்பது அவனின் மனவிக்கு பிடிக்கவில்லையாம். எல்லாம் நடக்கிற விதத்தில் இருக்கு. இந்த வீட்டில் நாங்கள் மூவர் மட்டுமே, பிறர் தலையீடு இருக்கத் தேவையில்லை ” சரசு பதில் சொன்னாள்.
***
காலம் உருண்டோடியது . செல்வாவுகும் சுபத்திரவுகும் ஒரு மகள் பிறந்தாள். சரசுவுக்கு பெரும் சந்தோசம் மருமகளிடம் இந்த வீட்டில் மூவர் நால்வரராகி விட்டோம் . இன்னும் இரண்டு வருசத்திலை எனக்குக ஒரு பேரனை பெத்துக் கொடு இந்த வீட்டில் ஐயிந்தாகி விடுவோம்” : என்றாள் மருமகளிடம் சரசு சிரித்தபடி.
அவளின் ஆசை நிறைவேற முன் சரசு கண் முடிவிட்டாள் . தன் மரணச் செலவுக்கும்,. அனாதைப் பிள்ளைகள் இல்லதுக்கும், பேத்தியின் படிப்புக்கும் மருமகளிடம் தேவையான பணம் கொடுத்து தனக்குச் சொல்லாமல் தாய் போனது ஜெயாவுக்குத் தெரியாது. சுபத்திரா முழு விபரம் சொன்னபோது அவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் மனதுக்குள் தாயை பற்றி பெருமை பட்டான் தன்மேல் இருந்த நம்பிக்கையை விட தாயுக்கு சுபத்திராமேல் மேல் அவலளுக்கு இருந்த நம்பிக்கையும், பாசத்தையும் நினைத்து மறைந்த தாயின் மேல் அவனுக்கு இருந்த மரியாதை மேலும் கூடியது.
****
( யாவும் புனைவு )