வீர புரான் அப்பு
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காலனித்துவ ஆட்சியின் போது நாட்டுப் பற்று உள்ள வீரர்கள்,. வீரமங்ககைகள் பலர் வாழ்ந்து ,போராடி, தமது உயிரை அர்பணித்தாக வரலாறு சொல்கிறது. தமிழ் நாட்டில் வீர பாண்டிய கட்டபொம்மன்,. வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்ட புலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதர்கள் போன்றோரை குறிப்பிடலாம். இலங்கையில் சுமார் 450 வருட காலனித்துவ ஆட்சிக்கு எதிராக சங்கிலியன் . பண்டார வான்னியன், புரான் அப்பு , கோங்கலகொட பண்டா, மொனறவில கெபிட்டிபொல போன்ற சில வீரர்கள் இருந்து போரிட்டு தம் உயரை அர்ப்பணித்தாக இலங்கை வரலாறு சொல்கிறது. கண்டியை கடைசியாக ஆண்ட நாயகர் வம்சத்தைச் சேர்ந்த இராஜசிங்க ( கண்ணுசாமி) மன்னனின் கொடுங்கோல ஆட்சியை தமக்கு சாதகமாகப் பாவித்து 1815 யில் கண்டி இராச்சியத்தின் ஆட்சியை கைப்பற்றி முழு இலங்கையும் பிரித்தானியர் தம் ஆட்சிக்குள் கொண்டு வந்தனர். பிரித்தானியர் 1815 முதல் 1948 வரை முழு இலங்கையும் ஆண்டனர் . அக்காலத்தில் இலங்கையின் கனி வளத்தை சுரண்டி எடுத்து பின் தங்கிய பிரித்தனியாவின் பொருளாதாரத்தை வளர்த்தனர் . அவர்களின் ஆட்சி காலத்தில வரிப் பழு தாங்கமுடியாமல் மக்கள் கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தில் தலைமை வகித்வர்கள் வீர புரான் அப்புவும், கோங்கலகொட பண்டாவும் . மேலும் 1848இல் மாத்தளை கிளர்ச்சி நடந்த போது டொரிங்டன், எழாவது விஸ்கவுண்ட் ஆளுநராக இருந்தார் காலனித்துவ எதிர்ப்பு கிளர்ச்சியின் பாரம்பரிய நிலப்பிரபுத்துவ வடிவத்திலிருந்து நவீன சுதந்திர போராட்டங்களுக்கு மாற்றமடைந்தது..
****
கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் போகும் A9 பாதையில் 30 கிமீ தூரத்தில் கடல் மட்டத்துக்கு 1300 அடியில் அமைந்த நகரம் மாத்தளை. தேசியத் தலைரான மொனறவில கெபிட்டிபொல பிறந்த ஊர். ,இவர் , பிரித்தானிய துருப்புக்களுக்கு எதிராக வெல்லசா கிளர்ச்சியை நடத்தியவர். இங்கு பிரித்தானியர் ஆட்சியின் காலத்தில் மசக்டோவேல் என்ற பெயரில் கோட்டை ஓன்று இருந்தது. மலைகள் சூழந்த பகுதி. . இங்குதான் 1848 இல் மக்கள் புரட்சி வெடித்தது
****
கண்டி மாகாணங்களின் மக்கள் கொந்தளிப்பு நிலையில் இருந்தனர். அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 32 ஆண்டுகள் படிப்படியாக ஆட்சியை வெறுக்கத் தொடங்கினர் . பாசன விதிகளின் கீழ், பிரிட்டிஷ் விவசாயிகளின் பொதுவான நிலத்தை அபகரித்துக் கொண்டு, அவர்களின் உரிமைகளைக் குறைத்தது அரசு .
1830 இல், கோப்பி உற்பத்தி இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதிக உயரத்தில் செழித்து வளரும் இப் பயிர் விவசாயிகளிடமிருந்து அபகரிகப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டது. 1867 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லர் மற்றும் ஸ்கொட்மன்மேன் ஆகியோர் முதன் முதலாக கண்டியில் கலாஹாவுக்கு அருகில் உள்ள லூலேகொண்டர (Loolecondera) என்ற இடத்தில் 19 ஏக்கர் நிலத்தில் தேயிலை பயிரிட்டனர் பின் தேயிலை தோட்டங்கள் பல தோன்றின .அத்தொட்டங்களில் உள்ளூர் வாசிகள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய மறுத்ததால் குறைந்த கூலியில் தமிழ் நாட்டில் இருந்து வேலையாட்கள் கங்காணி முறை மூலம் கொண்டு வரப்பட்டனர்
மேற்கு இந்திய தீபகற்பத்தில் காபி உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது. எனினும், விவசாயிகளிடம் இருந்து எடுக்கப்பட தோட்டங்களில் அவர்களுக்கு வேலை செய்ய இடம் இருக்கவில்லை: கண்டிய கிராமங்களில் காலனித்துவ அரசால் செலுத்திய அனைத்து அழுத்தத்தில் , இந்தப் புதிய தோட்டங்கள் மேலோங்கியது தென்னிந்தியாவிலிருந்து இலங்கை தேயிலைத் தோட்டங்ககளில் நூறாயிரக்கணக்கான தமிழர்களின் குளிர்காலங்களில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய கொண்டு வரப் பட்டனர். இந்தத் தமிழ் தொழிலாளர்கள், பயணத்திலும், தோட்டங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர்.
சர் ஜேம்ஸ் எமர்சன் என்ற கொழும்பு காலனிய செயலாளரின் வரிவிதிப்பு தீவிரமான திட்டம் செயல் படுத்தப் பட்டது. மக்கள் மீது நேரடி வரி விதித்தார் 40,000 பவுண் பற்றாக்குறையை தீர்க்க மக்களின் மேல் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு புதிய ஆளுனர் , 35 வயதான லார்ட் டொரிங்டன். மற்றும் பிரதம மந்திரி அவரின் உறவினரான லார்ட் ரஸல். இவர்கள் சீர்திருத்தங்களை செயல்படுத்த விக்டோரியா ராணியிடம் அனுமதி பெற்றனர்
ஜூலை 1, 1848 முதல் , துப்பாக்கி, நாய்கள், வண்டிகள், கடைகள் மற்றும் தோட்டங்களில் உரிமம் கட்டணங்கள் ஒரு சிறப்பு வரி கட்டாயப்படுத்தினார் . இந்த வரிகள் கண்டிய விவசாயிகளின் மரபுகளையும் சுதந்திரத்தையும் . பாதித்தது. இந்த மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை வரிகளை எதிர்த்து பாரிய இயக்கம் வளர்ந்தது. மக்களின் தங்களது கண்டி இராச்சியத்தின் மன்னன் 1815 இல் பதவியிறக்கப்பட்ட பின்னரும் பல தலைவர்கள் ஊவா கலகம் அடக்க்கப்பட்டு தலைமை இல்லாமல் காலனித்துவ ஆட்சியோடு இணைந்து செயல் பட்டனர்
.கண்டி மாகாணங்களில் சாதாரண மக்கள் கைகளில் முதல் தடவையாக தலைமை தாங்கியது தம்புள்ளை, பௌத்த. துறவி. ஜீரணகம தேரா
****
ஜீரணகம தேரா. கோங்கலகொட பண்டா "ஸ்ரீ சபா சார் சித்தி ரஜசிங்க" என்று அவர் அழைக்கப்பட்டார். “நீங்கள் பெளத்தர்களா அல்லது பிரித்தானியர்களின் ஆதரவாளர்களா”? என்று மக்களிடம் அவர் கேட்டார். அதே நாளில் டெய்ன்ஸ் என்ற , அவரது சகோதரர் துணை ராஜாவாகவும் ஏழு கவுன்சிலர்களினால் கோங்கலகொட பண்டா முடிசூடா மன்னராக அறிவிக்கப்பட்டனர். வீர புரன் அப்பு பிரதம மந்திரியாகவும், கோங்கலகொட பண்டாவினால் நியமிக்கப்பட்டார்.
****
யார் இந்த வீரன் புரான் அப்பு? வீர புரன் அப்பு (Vira Puran Appu, ) என அழைக்கப்படும் வீரகென்னாதிகே பிரான்சிசுக்கோ பெர்னாண்டோ (Weerahennadige Francisco Fernando, 7 நவம்பர் 1812 இல் பிறந்தவர் - இலங்கை வரலாற்றில் விடுதலைக்காகப் போராடிய குறிப்பிடத்தக்க ஒரு நபர். இவர் கொழும்புக்கு அருகே மேற்கு கரையில் உள்ள மொறட்டுவ நகரில் உயன பிரதேசத்தில் பிறந்தவர். தனது 13ம் வயதில் தான் பிறந்த இடத்தை விட்டு தனது வழக்கறிஞரான மாமனாருடன் இரத்தினபுரி சென்று அங்கு வாழ்ந்து வரலானார். தனது நாடு, மதம், இனம் என்பவற்றிற்கு தன்னை அர்ப்பணிக்க கருதிய அவர் தன் பெயரை புரன் அப்பு என மாற்றிக்கொண்டார். இரத்தினபுரியில் அப்பு என்பது மதிப்பிக்கு உறிய பெயர்
பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளிற்க்கு எதிராக 1848 விடுதலைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார். கடப்பொல தேரரின் வழிகாட்டலில் மாத்தளை மெக்டோவல் கோட்டையைக் கைப்பற்றினார். எனினும் இப்போராட்டம் தோல்வியில் முடிந்தது. அவர் கைது செய்யப்பட்டு 1848 ஆம் ஆண்டு ஆகத்து 8 ஆம் நாள் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டார்
.கொழும்பில் இருந்து தேற்கு கரையோரமாக உள்ள ஊர் மொரட்டுவ. நீண்ட பெயர் கொண்ட கத்தொலிக்கரான புரான் அப்பு `மொரட்டுவவில் வெஸ்லியன் பாடசாலையில் கல்வி கற்றான் . சிறுவயதில் மிகவும் குளப்படிக்காரச் சிறுவன். லக்ஷபத்தியத்திலிருந்த கிராமத் தலைவனோடு சண்டையிட்டு, அடித்ததால் போலீஸ் அவனைத் தேடியது . மொரட்டுவிலிருந்து 13 வயதில் 1825 ஆம் ஆண்டில் அவரன் ரத்தினபுரியில் உள்ள மாமன் வீட்டுக்கு ஓடிவிட்டான். - நாட்டின் மலைப்பகுதி, கிராமங்களில் பயணம் செய்தான். அவர்களின் பிரச்சனைகளை அறிந்தான் அவரது மாமா, பிரான்சிஸ்கோ பெர்னாண்டோ, இரத்தினபுரியில் பயிற்சி பெற்ற முதல் சிங்கள வழக்கறிஞராவார்.
அவர் இப்போது கஷ்டங்களை மற்றும் அவமதிப்புகளால் அவர்கள் அந்நிய ஆதிக்கத்தினுள் பாதிக்கப்பட்ட மக்களை விடுதலை செய்யும் பொருட்டு நாட்டிலிருந்து பிரித்தானியரை ஓட்டுவது தேவையென தீர்மானித்து கொண்டான்.
இந்த முடிவைக் கொண்டு, அவர் மஹியங்கன மற்றும் முத்துயங்கன சங்கம் ஆகியவை அவருக்குஆதரவு வழங்கயது. இந்த 1845 அச்சமயத்தில் அவர் காதல் எதிர்கொண்டதால் அவர் 1847 ஹாரிஸ்பத்துவ இல் வாழ்ந்த பண்டார மெனிக்கே என்பவரை மணந்தார் . ஃபிரான்சிஸ்கோ இப்போது புரான்கிஸ்கோ அல்லது புரான் அப்பு என்று அழைக்கப்பட்டார் .
ஜூலை 28, 1848 அதிகாலை புரான் அப்பு தலைமையில் எட்டு முதல் பத்து ஆயிரம் வீரர்களைக் கொண்ட படை தம்புள்ளை இருந்து கண்டி கண்டி நோக்கி துப்பாக்கிகள், ஈட்டிகள் மற்றும் கத்திகள் ஆயுதம். ஆகியவற்றுடன் படை எடுத்தனர்
மூன்று வெவ்வேறு திசைகளில் புரான் அப்பு,கோன்கல பண்டா, மற்றும் டிங்கிரிகல ஆகியவர்களின் தலைமயில் இருந்த வீரர்கள் கூட்டம் பின்னர் கடுகஸ்தொடவில் சந்தித்து ஞாயிறு, 30 ஜூலை கண்டியை தாக்ககினார்கள்
.
கண்டி இராச்சியத்தின் அந்த புதிய மன்னர் பிரகடனத்திற்குப் பின்னர், அவர் மற்றும் புரடசியாளர்களின் படை மாத்தளை வழியாக தம்புள்ளை பிரித்தானியப் பகுதியிலிருந்து கண்டிவரை கைப்பற்றியது . அப்படை மாத்தளை கச்சேரி உட்பட அரசாங்க கட்டிடங்களை தாக்கி வரி பதிவுகளை அழித்தது. இதற்கிடையில், டிங்கிரிராலா குருநாகல் தாக்குதலில் , அங்கு எட்டு பேர் பிரிட்டிஷ் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆளுநர் டொரிங்டன் உடனடியாக இராணுவச் சட்டத்தை கண்டி 1848 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதியும், குருநாகலையில் ஜூலை 31 ஆம் திகதியும்அமுல் படுத்தினர் .
புரான் அப்புவை பிரிட்டிஷ் துருப்புக்கள் கைது செய்தது ஆகஸ்ட் 8 ம் தேதி தேசத்துரோகத்துக்கு சுட்டு கொன்றது . கோங்கலகொட பண்டா மற்றும் அவரது அண்ணன் டெய்ன்ஸ் தப்பி ஓடி மறைந்தனர். மாத்தளைவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எல்கத்தாவில் இருக்கும் குகையில் வசித்து வந்தார்கள். ஆளுனர் டொரிங்டன். அவர்களின் கைதுகளுக்காக 150 ரூபா சன்மானம் கொடுப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அவருக்கு பயனும் கிடைத்தது. செப்டம்பர் 21 ம் திகதி, அவர் மலாய் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார் - கைது செய்யப்படுவதற்கு முன்பாக அவர் எதிர்த்து நின்றார் - மாத்தளை மற்றும் கண்டி ஆகிய இடங்களிலிருந்து அவர் கைதியாக வைக்கப்பட்டார்.
கண்டலோகொட பண்டாவின் விசாரணை நவம்பர் 27 ஆம் திகதி கண்டிவில் உச்ச நீதிமன்ற அமர்வுகளில் நடந்தது . அவர் பிரிட்டனுக்கு எதிராக போரை நடத்தி வருவதாகக் கூறப்பட்டு அவர் ஒரு தேசத்துரோகி எனக் குற்றச்சாட்டப் பட்டார். அவர் எல்லா குற்றச்சாட்டுக்களுக்கும் தான் குற்றவாளி என்று அறிவித்தார். உச்ச நீதிமன்றம் அவரை ஜனவரி 1, 1849 அன்று தூக்கிலிட தீர்ப்பு வழங்கியது பின்னர் மரண தண்டனையை மலேசியாவுக்கு நாடுகடத்தலாக பிரகடனப்படுத்தப்பட்டது.
புரான் அப்புவின் , கிளர்ச்சி மாத்தளை கைப்பற்றுவதில் வெற்றிகரமானதாக இருந்த போதிலும், துரோகிகள் சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைதானார்
****
ஆகஸ்ட் 8, 1848 அன்று 35 வயதி ல் , போகம்பரா ஜெயிலில் , வீர புரான் அப்புவை
அரசு சுட்டுக் கொன்றது.
அவரை கௌரவிக்கும் முகமாக மொரட்டுவையில் வீர புரான் அப்பு வித்யாலயா என அவன் படித்த கல்லூரி பெயரிடப்பட்டுள்ளது.. புரான் அப்பபுவின் வாழ்க்கை வரலாறு படமாக 1978 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது,
புரான் அப்புவுக்கு தீர்ப்பு கொடுக்கும் பொது அவன் பிரித்தானிய ஆட்சிக்கு சொன்ன இறுதி வார்த்தைகள் “நான் உங்களுக்கு ஓன்று சொல்ல விரும்புகிறேன் . என்னைப் போன்ற அரை டஜன் பேர் தொடர்ந்து வழி நடத்தியிருந்தால், கண்டி மாகாணத்தில் ஒரு வெள்ளையனும் இருந்திருக்க முடியாது.”
அவன் சொன்னது உண்மைதான். அத்தகைய தலைவர்கள் இருந்திருந்தால், நாட்டை இழந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை
*****