கண்ணீரும் அழுகுதே ஓ

மொட்டைக் கொல்லும் தேனீக்கள்
சாட்டைத் தடுக்கும் நீதீக்கள்
காடே..! மேடே...! கிளர்ந்து எழு
நாட்டைக் கெடுப்போர் மூச்சை எடு
மழலை மொழியின் ஒலியும் ஒப்பாரி வைத்ததே - பூவே
சருகாய் பூமியில் வீழ்ந்ததே.. கண்ணீரும் அழுகுதே .. ஓ

கடவுள் உள்ளம் செய்ததென்ன பிழையா
கருணை இன்றி கழுத்தறுக்கப் பெரும் படையா
கெட்டவை ஆழும் பூமி இங்கு வாழ தகுதியில்லை சாமி
என் கண்ணில் நீருண்டு... பூமியாழ்பவை புதையும் நாள் என்று..?

இருள் வீட்டுப் பிணமாக இப்பூமி மாறுது இங்கே
பொருள் கூட்டி புகழாக நீதி கொல்லும் நிலை இங்கே
பூமிக்குள் பூகம்பம் ஒன்றிரண்டு வர வேண்டும்
பிழைகளின் ஆட்சியில் நீதி தின்னும் பூச்சிகளே..! - உயிர்
இழைகளை விட்டு அன்றே பிரிந்திட வேண்டும்..!

எழுதியவர் : செ.பா.சிவராசன் (14-Apr-18, 12:30 am)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 18910

மேலே